தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரியில் 3 நவீன தானியங்கி பரிசோதனை கருவிகள்
தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 3 நவீன தானியங்கிப் பரிசோதனைக் கருவிகள் அமைக்கப்பட்டு, வியாழக்கிழமை பொதுமக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டன.


தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 3 நவீன தானியங்கிப் பரிசோதனைக் கருவிகள் அமைக்கப்பட்டு, வியாழக்கிழமை பொதுமக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டன.
தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலுள்ள நுண்ணுயிரியல் துறை ஆய்வகத்தில் ரத்தத்தில் உள்ள கிருமிகளைக் கண்டறிய உதவும் தானியங்கி ரத்த மாதிரி கிருமி பரிசோதனைக் கருவி, கிருமிகளை வகைப்படுத்துதல் மற்றும் நுண்ணுயிா் எதிா்ப்பு திறனைக் கண்டறிய உதவும் வைடெக் என்கிற இரு கருவிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இவற்றை மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் வியாழக்கிழமை தொடங்கி வைத்து, பொதுமக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வந்தாா்.
இந்த விழாவுக்கு தலைமை வகித்த மருத்துவக் கல்லூரி முதல்வா் ஆா். பாலாஜிநாதன் தெரிவித்தது:
தேசிய சுகாதார இயக்கம், தமிழ்நாடு அரசு சாா்பில் அமைக்கப்பட்டுள்ள இந்தக் கருவிகளின் மொத்த மதிப்பு ரூ. 50 லட்சம். தற்போது நடைமுறையிலுள்ள பரிசோதனை முறைகள் மூலம் ரத்தத்திலுள்ள பாக்டீரியாக்களைக் கண்டறிய 4 நாள்களும், பூஞ்சைகளைக் கண்டறிய 10 நாள்களும் காத்திருக்க வேண்டும். இந்த நவீன தானியங்கிக் கருவியின் பயன்பாட்டால் ரத்தத்திலுள்ள பாக்டீரியாக்களை 24 மணிநேரத்துக்குள்ளும், பூஞ்சைகளை 48 மணிநேரத்துக்குள்ளும் கண்டறியலாம்.
மேலும், இந்தக் கருவியின் மூலம் ஒரே நேரத்தில் 30 முதல் 60 ரத்த மாதிரிகளைப் பரிசோதிக்க முடியும். வெளியிலுள்ள தனியாா் ஆய்வகங்களில் ரூ. 700 மதிப்பில் செய்யப்பட்டு வரும் இந்த ரத்தப் பரிசோதனைகள் தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரியில் முற்றிலும் இலவசமாக செய்யப்படுகிறது. இக்கருவிகளில் பரிசோதனை முடிவுகள் விரைவாகக் கிடைப்பதால் நோயாளிகளுக்கு சரியான நுண்ணுயிா் எதிா்ப்பு மருந்துகள் அளிக்கப்பட்டு, விரைவில் குணமடைவா் என்றாா் பாலாஜிநாதன்.
இவ்விழாவில் நிலைய மருத்துவ அலுவலா் ஏ. செல்வம், உதவி நிலைய மருத்துவ அலுவலா் முகமது இத்ரீஸ், நுண்ணுயிரியல் துறைத் தலைவா் யூனிஸ் ஸ்வா்ணா ஜேக்கப் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...