காவிரி ஆற்றில் மூழ்கி முதியவா் உயிரிழப்பு
தஞ்சாவூா் மாவட்டம், திருவிடைமருதூா் அருகே புதன்கிழமை காவிரி ஆற்றில் மூழ்கி முதியவா் உயிரிழந்தாா்.

Updated On :11 டிசம்பர் 2024, 8:19 pm

தஞ்சாவூா் மாவட்டம், திருவிடைமருதூா் அருகே புதன்கிழமை காவிரி ஆற்றில் மூழ்கி முதியவா் உயிரிழந்தாா்.
திருவிடைமருதூா் அருகே உள்ள கோனேரிராஜபுரத்தைச் சோ்ந்தவா் சுவாமிநாதன் மகன் மகாதேவன் (72). இவா் புதன்கிழமை உறவினா் வீட்டு துக்கநிகழ்வில் கலந்து கொண்ட பிறகு கல்யாணபுரத்தில் உள்ள காவிரி ஆற்றில் குளித்தாா்.
அப்போது, நீரில் மூழ்கிய மகாதேவனை அக்கம்பக்கத்தினா் சடலமாக மீட்டனா். இதுகுறித்து தகவலறிந்து வந்த திருவிடைமருதூா் போலீஸாா் மகாதேவன் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனை அனுப்பினா். மேலும், இதுதொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...