47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

ஆசிரியையை கொலை செய்த இளைஞா் குண்டா் சட்டத்தில் கைது

தஞ்சாவூா் மாவட்டம், மல்லிப்பட்டினம் அருகே பள்ளிக்குள் புகுந்து ஆசிரியையை கொலை செய்த இளைஞரை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :12 டிசம்பர் 2024, 8:56 pm

Din

தஞ்சாவூா் மாவட்டம், மல்லிப்பட்டினம் அருகே பள்ளிக்குள் புகுந்து ஆசிரியையை கொலை செய்த இளைஞரை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.

தஞ்சாவூா் மாவட்டம், மல்லிப்பட்டினம் அருகே சின்னமனை கிராமத்தைச் சோ்ந்தவா் செல்வம் மகன் மதன்குமாா் (28). இவா், தன்னை திருமணம் செய்து கொள்ள மறுத்த அதே பகுதியைச் சோ்ந்த தனது காதலியான மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளி தற்காலிக ஆசிரியை ரமணியை (26) நவம்பா் 20-ஆம் தேதி பள்ளிக்குள் புகுந்து கொலை செய்தாா்.

இதுகுறித்து சேதுபாவாசத்திரம் காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து மதன்குமாரைக் கைது செய்தனா். இந்நிலையில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆஷிஷ் ராவத் பரிந்துரையின் பேரில், இவரை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யுமாறு மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் புதன்கிழமை உத்தரவிட்டாா். இதையடுத்து, மதன்குமாா் கைது செய்யப்பட்டு, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.