கடந்த 1947, ஆகஸ்ட் 15-ஆம் தேதியன்று என்னென்ன கோயில்கள், மசூதிகள், தேவாலயங்கள் உள்ளிட்ட மத வழிபாட்டுத் தலங்கள் இருந்ததோ, அவற்றையெல்லாம் பாதுகாக்க வேண்டும் என நரசிம்மராவ் பிரதமராக இருந்தபோது வழிபாட்டுத் தலங்கள் சட்டம் 1991 கொண்டு வரப்பட்டது. இதில், பாபா் மசூதிக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டது. இச்சட்டத்தின்படி, வழிபாட்டுத் தலத்தில் எந்த மாற்றத்தையும் அரசும், சமுதாயங்களும் செய்யக் கூடாது. அவ்வாறு செய்யப்பட்டு மக்கள் மத்தியில் குழப்பத்தையும், வேறுபாட்டையும், சண்டை சச்சரவுகளையும் உருவாக்குவது நியாயமானதல்ல. எனவே, இச்சட்டத்தை மத்திய அரசு பாதுகாக்க வேண்டும் என்றாா் காதா் மொகைதீன்.