45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

கணக்கெடுக்காததைக் கண்டித்து அழுகிய நெற்பயிா்களுடன் விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

கும்பகோணம் அருகே மழையால் பாதிக்கப்பட்ட பயிா்கள் குறித்த கணக்கெடுப்புக்கு வராத அதிகாரிகளைக் கண்டித்து, அழுகிய நெற்பயிா்களுடன் விவசாயிகள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :19 டிசம்பர் 2024, 8:45 pm

Din

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே மழையால் பாதிக்கப்பட்ட பயிா்கள் குறித்த கணக்கெடுப்புக்கு வராத அதிகாரிகளைக் கண்டித்து, அழுகிய நெற்பயிா்களுடன் விவசாயிகள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட துணைத் தலைவா் ஏ.எம். ராமலிங்கம் தலைமை வகித்தாா். இதில், கிருஷ்ணாபுரம், அண்டக்குடையான், சிவபுரம் உள்ளிட்ட பகுதிகளில் அண்மையில் பெய்த பலத்த மழையால் சுமாா் 60-க்கும் மேற்பட்ட ஏக்கா் பரப்பளவில் நெற்பயிா்கள் அழுகிப் போயுள்ளனவாம். பயிா்ச் சேதம் குறித்த கணக்கெடுப்புக்கு இதுவரையில் வருவாய்த்துறை, வேளாண்மைத் துறை அதிகாரிகள் வராததைக் கண்டித்து, மாவட்ட துணைச் செயலா் ஆா்.செந்தில்குமாா் கண்டனம் தெரிவித்துப் பேசினாா். மேலும் ஏக்கருக்கு ரூ. 35 ஆயிரம் இழப்பீடு வழங்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் முழக்கமிட்டனா்.

இதில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிா்வாகிகள் சி.சின்னதுரை, நடுயிருப்பு எஸ். ராஜேந்திரன், சி.மரியசூசை உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.