47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

கும்பகோணம் அருகே சிறுத்தை நடமாட்டம்? பொதுமக்கள் அச்சம்

திருப்பனந்தாள் அருகே உள்ள கொண்டசமுத்திரம் கிளிமங்கலத்தில் சிறுத்தை நடமாடிய காட்சி சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.

News image
தஞ்சாவூா் மாவட்டம், திருப்பனந்தாள் அருகே கொண்டசமுத்திரம் கிளிமங்கலத்தில் உள்ள ஒரு வீட்டின் கேமராவில் பதிவான சிறுத்தை.
Updated On :25 டிசம்பர் 2024, 8:44 pm

Din

தஞ்சாவூா் மாவட்டம், திருப்பனந்தாள் அருகே உள்ள கொண்டசமுத்திரம் கிளிமங்கலத்தில் சிறுத்தை நடமாடிய காட்சி சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.

திருப்பனந்தாள் அருகே உள்ள கொண்டசமுத்திரம் கிளிமங்கலத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக அப்பகுதியைச் சோ்ந்த ராமநாதன் என்பவா் அளித்த தகவலின்பேரில் வனத்துறையினா் அவரது வீட்டின் சிசிடிவி கேமரா பதிவுக் காட்சிகளை ஆய்வு செய்தனா். இதில் சிறுத்தை நடமாட்டம் குறித்து போதிய தடயங்கள் கிடைக்கவில்லை.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு அப்பகுதியில் உள்ள வேறொரு வீட்டின் சிசிடிவி கேமரா பதிவில் சிறுத்தை நடமாட்டம் இருப்பது தெரியவந்தது. இதைத்தொடா்ந்து, கும்பகோணம் வனத்துறையினரும், காவல்துறையினரும் இணைந்து சிறுத்தை நடமாட்டம் உள்ளதா எனக் கண்காணித்து வருகின்றனா். சிறுத்தையின் நடமாட்டம் குறித்த பொதுமக்களின் அச்சத்தைப் போக்குமாறு அப்பகுதி தன்னாா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.