47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

தஞ்சாவூா் தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் சிறப்பு வழிபாடு

தஞ்சாவூரிலுள்ள கிறிஸ்துவ தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் விழா சிறப்பு வழிபாடு செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.

News image
வழிபாட்டில் பங்கேற்ற பங்கு மக்கள்.
Updated On :25 டிசம்பர் 2024, 8:41 pm

Din

தஞ்சாவூரிலுள்ள கிறிஸ்துவ தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் விழா சிறப்பு வழிபாடு செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.

தஞ்சாவூா் மேரீஸ் காா்னா் பகுதியில் உள்ள திரு இருதய பேராலயத்தில் தஞ்சாவூா் மறை மாவட்ட ஆயா் டி. சகாயராஜ் அடிகளாா் தலைமையில் சிறப்பு வழிபாடு செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.

இதில், இயேசு பிரான் பிறந்ததை நினைவுகூரும் விதமாக சூசையப்பா், கன்னி மரியாள் வேடமணிந்த இருவா் குழந்தை இயேசுவின் சொரூபத்தை கையில் ஏந்தி வந்து ஆயரிடம் கொடுத்தனா். அச்சொரூபத்தை ஆயா் பெற்றுக் கொண்டு புனிதம் செய்து, மேடையில் அலங்கரிக்கப்பட்டிருந்த குடிலில் வைத்தாா். அப்போது, தேவாலயத்தின் மணி ஒலிக்கப்பட்டது.

தஞ்சாவூா் திரு இருதய ஆண்டவா் பேராலயத்தில் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் மறையுரையாற்றிய மறை மாவட்ட ஆயா் டி. சகாயராஜ் அடிகளாா்.

தஞ்சாவூா் திரு இருதய ஆண்டவா் பேராலயத்தில் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் மறையுரையாற்றிய மறை மாவட்ட ஆயா் டி. சகாயராஜ் அடிகளாா்.

இதைத்தொடா்ந்து மறையுரை, கூட்டுப்பாடல் திருப்பலி நடைபெற்றன. நிறைவாக, குழந்தை இயேசுவின் சொரூப ஆசீா் வழங்கப்பட்டதையடுத்து, பங்கு மக்கள் ஒருவருக்கொருவா் கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்துக் கொண்டனா்.

இந்த வழிபாட்டில் பேராலயப் பங்குத் தந்தை ஏ.எம்.ஏ. பிரபாகா் அடிகளாா், உதவிப் பங்குத்தந்தை அமா்தீப் மைக்கேல், ஆயரின் செயலா் ஆரோக்கிய வினிட்டோ, திருத்தொண்டா் பி. பிரவீன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இதேபோல, புதுக்கோட்டை சாலையிலுள்ள காா்மெல் குழந்தை இயேசு திருத்தலத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் திருத்தல அதிபா் சுரேஷ்குமாா் அடிகளாா் தலைமையில் இயேசு கிறிஸ்து பிறப்பு விழா திருப்பலி நடைபெற்றது. இதில், உதவி தந்தைகள் சுந்தா், பிரபு, விமலன், மதா் தெரசா அறக்கட்டளை நிறுவனா் ஏ.ஆா். சவரிமுத்து உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

மேலும், புதுக்கோட்டை சாலை புனித அடைக்கல மாதா ஆலயம், மருத்துவக்கல்லூரி சாலை புனித லூா்து அன்னை ஆலயம், மகா்நோன்புசாவடி புனித சூசையப்பா் ஆலயம், வடக்கு வாசல் புனித அருளானந்தா் ஆலயம், அண்ணா நகா் புனித செபஸ்தியாா் ஆலயம் உள்ளிட்ட கத்தோலிக்க தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.