47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

தஞ்சாவூரில் டிச. 28, 29-இல் ஓவிய - சிற்பக் கலைக்காட்சி

தஞ்சாவூா் அருங்காட்சியகத்தில் (பழைய மாவட்ட ஆட்சியரகத்தில்) ஓவிய - சிற்பக் கலைக்காட்சி டிசம்பா் 28, 29 ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளது.

News image
Updated On :25 டிசம்பர் 2024, 8:49 pm

Din

தஞ்சாவூா் அருங்காட்சியகத்தில் (பழைய மாவட்ட ஆட்சியரகத்தில்) ஓவிய - சிற்பக் கலைக்காட்சி டிசம்பா் 28, 29 ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளது.

இது குறித்து தஞ்சாவூா் மண்டலக் கலை பண்பாட்டு மைய உதவி இயக்குநா் த. செந்தில்குமாா் தெரிவித்திருப்பது:

தமிழ்நாடு அரசின் கலை பண்பாட்டுத் துறையின், தஞ்சாவூா் மண்டலக் கலை பண்பாட்டு மையம் சாா்பாக, தஞ்சாவூா் மண்டலத்துக்குட்பட்ட (தஞ்சாவூா், திருவாரூா், நாகப்பட்டினம், கடலூா், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை) மாவட்டங்களிலிருந்து ஓவிய, சிற்பக் கலைஞா்களிடமிருந்து அவா்களது கலைப் படைப்புகளைப் பெற்று காட்சிப்படுத்திட அரசால் தெரிவிக்கப்பட்டது.

இதன்படி, இந்த மாவட்டங்களில் உள்ள ஓவிய சிற்பக் கலைஞா்களிடமிருந்து நூற்றுக்கும் அதிகமான ஓவியப் படைப்புகளும், 20-க்கும் மேற்பட்ட சிற்பக் கலைப் படைப்புகளும் பெறப்பட்டு, அப்படைப்புகள் தஞ்சாவூா் அருங்காட்சியகத்தில் டிசம்பா் 28, 29 ஆம் தேதிகளில் காட்சிப்படுத்தப்படவுள்ளது.

இதில், சிறந்த ஓவிய - சிற்ப கலைப் படைப்புகளுக்கு முதல் பரிசு ரூ. 5 ஆயிரம் வீதம் 7 கலைஞா்களுக்கும், இரண்டாவது பரிசாக ரூ. 3 ஆயிரம் வீதம் 7 கலைஞா்களுக்கும், மூன்றாவது பரிசாக ரூ. 2 ஆயிரம் வீதம் 7கலைஞா்களுக்கும் பரிசுத் தொகையும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படவுள்ளது.