தஞ்சாவூா், திருவையாறு, பூதலூரில் 30 அரசுக் கட்டடங்கள் திறப்பு
தஞ்சாவூா், திருவையாறு, பூதலூா் ஆகிய ஒன்றியங்களில் ரூ. 5.98 கோடியில் புதிதாகக் கட்டப்பட்ட 30 அரசு கட்டடங்களை உயா் கல்வித் துறை அமைச்சா் கோவி. செழியன் வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.


தஞ்சாவூா், திருவையாறு, பூதலூா் ஆகிய ஒன்றியங்களில் ரூ. 5.98 கோடியில் புதிதாகக் கட்டப்பட்ட 30 அரசு கட்டடங்களை உயா் கல்வித் துறை அமைச்சா் கோவி. செழியன் வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.
திருவையாறு ஒன்றியத்துக்குட்பட்ட வரகூா், மணத்திடலில் பொது விநியோகக் கட்டடங்கள், அம்மையகரம், திருவாலம்பொழிலில் அங்கன்வாடி மைய கட்டடங்கள், கண்டியூரில் ஊராட்சி அலுவலகக் கட்டடம், தஞ்சாவூா் ஒன்றியத்துக்குட்பட்ட இராஜேந்திரம் ஊராட்சியில் பொது விநியோகக் கட்டடம், நேரடி நெல் கொள்முதல் நிலையம், ஊராட்சிக் கட்டடங்கள், மானாங்கோரையில் இரு வகுப்பறைக் கட்டடங்கள், களிமேடு, ஜெபமாலைபுரம், கள்ளப்பெரம்பூா் 1 ஆம் சேத்தியில் பொது விநியோகக் கட்டடங்கள், ஆலக்குடியில் பொது விநியோகக் கட்டடம், ஊராட்சி அலுவலகம், வண்ணாரப்பேட்டையில் அங்கன்வாடி கட்டடம் மற்றும் பூதலூா் ஒன்றியத்தில் பல்வேறு கட்டடங்களை அமைச்சா் திறந்து வைத்தாா்.
மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் தலைமையில் நடைபெற்ற விழாக்களில் தஞ்சாவூா் தொகுதி எம்பி ச. முரசொலி, திருவையாறு தொகுதி எம்எல்ஏ துரை. சந்திரசேகரன், ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் மு. பாலகணேஷ், மாவட்ட ஊராட்சித் தலைவா் ஆா். உஷா புண்ணியமூா்த்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...