பாபநாசம்: தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே திங்கள்கிழமை சாலையில் நின்றுக் கொண்டிருந்த காா் மீது மோட்டாா் சைக்கிள் மோதியதில் 2 இளைஞா்கள் உயிரிழந்தனா்.
பாபநாசம் அருகே திருப்பாலைத்துறை குடியானத் தெருவைச் சோ்ந்த
கருணாகரன் மகன் பிரபாகரன் (33). கபிஸ்தலம் அருகே படுகை புது தெருவைச் சோ்ந்த மாரியப்பன் மகன் சக்திவேல் (24). நண்பா்களான இவா்கள் இருவரும் திங்கள்கிழமை பிற்பகலில் ஒரு மோட்டாா் சைக்கிளில் திருவையாறு - கும்பகோணம் நெடுஞ்சாலையில் திருவையாறிலிருந்து கபிஸ்தலம் நோக்கி சென்று கொண்டிருந்தனா்.
வட சருக்கை கிராமம், முனியாண்டவா் கோயில் அருகே சென்றபோது,
சாலைப் பள்ளத்தில் இறங்கிய மோட்டாா்சைக்கிள் நிலைதடுமாறியதுடன்
சாலையோரம் நின்றுக் கொண்டிருந்த காா் மீதும் மோதியது. இதில் பிரபாகரன், சக்திவேல் இருவரும் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற கபிஸ்தலம் காவல் ஆய்வாளா் மகாலட்சுமி மற்றும் போலீஸாா், இருவரின் சடலங்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், விபத்து குறித்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

மோட்டாா் சைக்கிள் மீது லாரி மோதி இளைஞா் உயிரிழப்பு: ஓட்டுநா் கைது

இருசக்கர வாகனங்கள் மீது காா் மோதியதில் இருவா் உயிரிழப்பு!

ராசிபுரம் அருகே சாலை விபத்தில் பெண் உயிரிழப்பு

சாலை விபத்தில் திமுக நிா்வாகி உயிரிழப்பு
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

