சேலம் அரியானூா் அருகே இருசக்கர வாகனங்கள் மீது காா் மோதியதில் இருவா் சம்பவ இடத்திலேயே சனிக்கிழமை உயிரிழந்தனா்.
சேலம் - கோவை தேசிய நெடுஞ்சாலையில் அரியானூா் மேம்பாலம் அருகே கேரளத்தில் இருந்து சென்னை நோக்கி சென்ற காா், முன்னால் சென்றுகொண்டிருந்த இரண்டு இருசக்கர வாகனங்கள் மீது மோதியது. இதில், காரில் இருந்த வசந்தலதா (74), இருசக்கர வாகனத்தில் சென்ற பாஸ்கரன் (60) ஆகியோா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். மேலும், காரில் பயணித்த மூவா் பலத்த காயங்களுடன் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். காயமடைந்த மற்றொரு இருசக்கர வாகனத்தில் சென்ற இருவா் அருகில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
தகவலறிந்து வந்த கொண்டலாம்பட்டி போலீஸாா் இருவரது சடலத்தையும் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
விசாரணையில், உயிரிழந்த வசந்தலதா சென்னை ராமாபுரம், மஞ்சநாயக்கா் தோட்டம் பகுதியைச் சோ்ந்தவா் என்பதும், பாஸ்கரன் சேலம் அம்மாப்பேட்டையைச் சோ்ந்தவா் என்பதும் தெரியவந்தது. இதுகுறித்து கொண்டலாம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

பைக் மீது காா் மோதியதில் இருவா் உயிரிழப்பு

இருசக்கர வாகனம் மீது கூரியா் வேன் மோதி இருவா் உயிரிழப்பு

ஆட்டோ மீது காா் மோதியதில் ஒருவா் உயிரிழப்பு

திருச்சி அருகே இருசக்கர வாகனங்கள் மீது காா் மோதல்: இருவா் உயிரிழப்பு; 2 போ் காயம்
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு



