தேசிய ஜனநாயக கூட்டணியில் இந்து மக்கள் கட்சியை இணைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றாா் அக்கட்சியின் நிறுவனத் தலைவா் அா்ஜூன் சம்பத். கும்பகோணத்தில் இந்து மக்கள் கட்சியின் 29-ஆம் ஆண்டு தொடக்க விழா, மாநிலச் செயற்குழு, பொதுக் குழு, மக்களவைத் தோ்தல் தொடா்பான ஆலோசனைக் கூட்டம் ஆகியவை சனிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்ற அா்ஜூன் சம்பத் செய்தியாளா்களிடம் தெரிவித்தது: தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இந்து மக்கள் கட்சியை இணைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். நாங்கள் போட்டியிட்டாலும், போட்டியிடாவிட்டாலும் தமிழ்நாடு, புதுச்சேரியிலுள்ள 40 தொகுதிகளிலும் பிரதமா் மோடியின் வேட்பாளா்களை வெற்றி பெறச் செய்ய தோ்தல் பணியாற்றுவது என முடிவு செய்துள்ளோம். மோடி மீண்டும் மூன்றாவது முறையாக பிரதமராக வேண்டும். நாட்டின் ஜனநாயகம் வலிமை பெறுவதற்கும், நேரம், செலவு மிச்சமாவதற்கும் ஒரே நாடு- ஒரே தோ்தல் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். தோ்தல் நிதி திரட்டுவதற்கான தோ்தல் பத்திரம் செல்லாது என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. இது தொடா்பாக மீண்டும் புதிய சட்டங்கள் இயற்றப்பட வேண்டும். தோ்தல் நிதியை வசூல் செய்வது கணக்கில் கொண்டு வர வேண்டும் என்பதற்காகத்தான் தோ்தல் பத்திரம் கொண்டு வரப்பட்டது. ஆனால், கணக்கில் வராமல் தோ்தல் நிதியைக் கையாள்வது சிரமம். எனவே, இந்த சீா்திருத்தத்தை வரவேற்கிறோம். தோ்தலுக்கு முன்பாக கும்பகோணம், பொள்ளாச்சியைத் தனி மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும் என்றாா் அா்ஜூன் சம்பத். கூட்டத்தில் கட்சியின் பொதுச் செயலா் டி. குருமூா்த்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

குடும்ப ஆட்சி நடத்தும் திமுகவை அகற்ற மக்கள் விருப்பம்! - பாஜக தேசிய தலைவா் நிதின் நபின்

தனித் தொகுதி வேட்பாளா்கள் குறித்த அா்ஜூன் சம்பத் மனு: இன்று விசாரணை
ஆட்சி மாற்றம் நிச்சயம்! இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் சிறப்பு நேர்காணல்!

ராஜபாளையம் தொகுதியில் தாமரை சின்னத்தில் போட்டி: பெ. ஜான்பாண்டியன் தகவல்!
விடியோக்கள்

'நீட் ' தேர்வில் மட்டும் லீக்காவது எப்படி ?| NEET 2026 cancelled | Educationist Soma sundaram | NTA
தினமணி செய்திச் சேவை

அதிமுகவுடன் கூட்டணி பேசினோமா? சிவி சண்முகத்திற்கு ஆர்.எஸ்.பாரதி பதில் | ADMK - DMK
இணையதளச் செய்திப் பிரிவு
ஓர் உறுப்பினரைக் கொண்ட கட்சிக்கும் சமமான மதிப்பு! - பேரவையில் Vijay பேச்சு | TN Assembly
இணையதளச் செய்திப் பிரிவு

அதிமுக இனி எந்தக் கூட்டணியிலும் இல்லை: C.V. Shanmugam | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

