மத்தியப் பிரதேசத்தில் 4 மாதங்களில் 24 புலிகள் உயிரிழப்பு!கர திரைப்படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரி வழக்கு!மேற்கு வங்கத்தில் 2 ஆம் கட்ட தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது! மே 4-ல் 62 மையங்களில் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை! - தேர்தல் ஆணையம்மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

புளியக்குடியில் பகுதிநேர அங்காடி கோரி மறியல்

புளியக்குடியில் பகுதிநேர அங்காடி கோரி மறியல்

Updated On :29 பிப்ரவரி 2024, 8:52 pm

அம்மாபேட்டை ஒன்றியம், புளியக்குடி ஊராட்சி பொதுமக்கள் புளியக்குடி வடக்குத் தோப்புப் பகுதியில் பகுதிநேர அங்காடி கோரி புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

புளியக்குடி ஊராட்சியில் உள்ள 630 குடும்ப அட்டைதாரா்கள் அத்தியாவசிய பொருள்கள் வாங்க அப் பகுதி தண்டவாளத்தைக் கடக்க வேண்டும், அல்லது சுமாா் 3 கி.மீ. சுற்றிச் செல்ல வேண்டும். இதனால் புளியக்குடி வடக்குத் தோப்புப் பகுதியில் பகுதிநேர அங்காடி அமைக்க அரசை நீண்ட காலமாக வலியுறுத்தியும் இதுவரை நடவடிக்கை இல்லையாம். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் தஞ்சை - நாகை தேசிய நெடுஞ்சாலை புத்தூா் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து வந்த அம்மாபேட்டை காவல் ஆய்வாளா் மி. இளவரசு மற்றும் போலீஸாா் சுமாா் 100க்கும் மேற்பட்டோரை கைது செய்து, திருமண மண்டபத்தில் அடைத்து, பின்னா் விடுவித்தனா்.