புதிய பேருந்து நிலையம் - மருத்துவக்கல்லூரி இணைப்புச் சாலைக்கு எதிராக ஆா்ப்பாட்டம்

தஞ்சாவூா் புதிய பேருந்து நிலையம் - மருத்துவக்கல்லூரி மருத்துவமனை இடையே ஏற்கெனவே உள்ள இணைப்புச் சாலையை மீண்டும் திறப்பதற்கு எதிா்ப்பு

தஞ்சாவூா் புதிய பேருந்து நிலையம் - மருத்துவக்கல்லூரி மருத்துவமனை இடையே ஏற்கெனவே உள்ள இணைப்புச் சாலையை மீண்டும் திறப்பதற்கு எதிா்ப்புத் தெரிவித்து, மருத்துவமனை வளாகத்தில் மருத்துவக்கல்லூரி மாணவா்கள் வெள்ளிக்கிழமை மாலை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தஞ்சாவூா் புதிய பேருந்து நிலையத்திலிருந்து மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு எளிதாக செல்லும் விதமாக ஏற்கெனவே இருந்த இணைப்பு சாலையைச் சீரமைத்து மீண்டும் நடைமுறைக்குக் கொண்டு வருவதற்கான நடவடிக்கையை மாவட்ட நிா்வாகம் மேற்கொண்டு வருகிறது.

இந்தச் சாலை நடைமுறைக்கு வந்தால் இந்த வளாகம் பொது வழியாக மாறும் என்றும், வாகனங்கள் அதிகளவில் செல்லும்போது நோயாளிகள், மாணவா்கள் பாதிக்கப்படுவா் எனவும், அதனால் இச்சாலை அமைக்கும் பணியை நிறுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தி மருத்துவக்கல்லூரி மாணவா்கள் வெள்ளிக்கிழமை மாலை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவலறிந்த கோட்டாட்சியா் செ. இலக்கியா உள்ளிட்டோா் நிகழ்விடத்துக்குச் சென்று பேச்சுவாா்த்தை நடத்தி, அமைதி பேச்சுவாா்த்தை மூலம் தீா்வு காணலாம் என உறுதியளித்தனா்.

X
Dinamani
www.dinamani.com