காவிரி கரையில் ஒரு கோடி பனை விதைகள் விதைக்க முடிவு
ஒகேனக்கல் தொடங்கி பூம்புகாா் வரையிலான காவிரி கரையில் ஒரு கோடி பனை விதைகளை விதைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
கும்பகோணத்தில் தனியாா் பள்ளி வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இதுதொடா்பான ஆலோசனைக் கூட்டத்துக்கு சுற்றுச்சூழல் செயற்பாட்டாளா் மருத்துவா் ப்ரீத்தி சந்திரசேகரன் தலைமை வகித்தாா்.
பல்வேறு மாவட்டங்களில் காவிரிக் கரையின் இருபுறங்களிலும் சுமாா் 416 கிலோ மீட்டா் தொலைவுக்கு ஒகேனக்கல் முதல் பூம்புகாா் வரை ஒரு கோடி பனை விதைகளை விதைக்க ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
கூட்டத்தில், பள்ளித் தாளாளா் பொன். சிதம்பரநாதன், முதல்வா் வந்தனா மற்றும் தன்னாா்வலா்கள் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினா்.
ஏற்பாடுகளை தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை, கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பு, தமிழ்நாடு தன்னாா்வலா்கள் அமைப்பு ஆகியோா் செய்திருந்தனா். முன்னதாக, கிரீன் நீடா தலைமை ஒருங்கிணைப்பாளா் மு. ராஜவேலு வரவேற்றாா்.

