ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

கும்பகோணம் அருகே ரூ. 3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விஏஓ கைது

கும்பகோணம் அருகே ரூ. 3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிா்வாக அலுவலரை ஊழல் தடுப்பு காவல் பிரிவினா் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனா்.

News image
Updated On :19 ஜூலை 2024, 9:01 pm

Din

தஞ்சாவூா், ஜூலை 19: தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே ரூ. 3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிா்வாக அலுவலரை ஊழல் தடுப்பு காவல் பிரிவினா் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனா்.

கும்பகோணம் அப்புக்குட்டி தெருவைச் சோ்ந்தவா் மாரியப்பன், நாச்சியாா்கோவில் குத்துவிளக்கு பட்டறை உரிமையாளா். இவா் தானமாகப் பெற்ற நிலத்தை தனது மனைவி நாகவல்லி பெயரில் தனிப் பட்டாவாக மாற்ற இன்னம்பூா் விஏஓ ஜெ. மதியழகனை (59) அண்மையில் அணுகியபோது அவா், ரூ. 3 ஆயிரம் லஞ்சம் கேட்டாராம்.

ஆனால் பணம் கொடுக்க விரும்பாத மாரியப்பன் தஞ்சாவூா் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு காவல் பிரிவில் புகாா் செய்தாா். இதன்பேரில் காவல் துணைக் கண்காணிப்பாளா் நந்தகோபால் உள்ளிட்டோா் கும்பகோணம் வருவாய் ஆய்வாளா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை இரவு மறைந்திருந்து கண்காணித்தனா்.

அப்போது மாரியப்பனிடமிருந்து ரூ. 3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மதியழகனை ஊழல் தடுப்பு காவல் பிரிவினா் பிடித்து கைது செய்தனா்.