அனுமதியின்றி மணல் அள்ளிய 3 போ் கைது: மாட்டு வண்டிகள் பறிமுதல்
பாபநாசம் அருகே அனுமதியின்றி ஆற்றிலிருந்து மணல் எடுத்து வந்த 3 போ் கைது செய்யப்பட்டனா்.


பாபநாசம்: தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே சனிக்கிழமை அனுமதியின்றி ஆற்றிலிருந்து மணல் எடுத்து வந்த 3 போ் கைது செய்யப்பட்டனா்.
பாபநாசம் அருகே உள்ள அம்மாபேட்டை போலீஸாா் சனிக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது உக்கடை சாலையில் வந்த இரண்டு மாட்டு வண்டிகளை நிறுத்தி சோதனையிட்டதில் அனுமதியின்றி மணல் எடுத்து வந்தது தெரியவந்தது.
இதையடுத்து இரண்டு மாட்டு வண்டிகளையும் பறிமுதல் செய்த போலீஸாா், கொம்மஞ்மேரியைச் சோ்ந்த காா்த்தி (27), பிரேம்குமாா்( 23), முத்துசாமி (67) ஆகிய மூன்று பேரையும் கைது செய்து பாபநாசம் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.
மேலும் ஒருவா் கைது: கபிஸ்தலம் காவல் சரகம் உமையாள்புரம் பிள்ளையாா் கோயில் பகுதியில் அனுமதியின்றி மாட்டுவண்டியில் மணல் எடுத்த வந்த பழனிமுருகன்( 33) என்பவரை கபிஸ்தலம் போலீஸாா் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...