சென்னை திரும்பும் மக்கள்: இரு நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம்சீனா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைதமிழகம், மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு இல்லை: தோ்தல் ஆணையம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு காஸாவில் தோ்தல்!தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக கடும் விமா்சனம்
/

பிளஸ் 1 தோ்வு தொடக்கம்: தஞ்சாவூா் மாவட்டத்தில் 28 ஆயிரம் போ் பங்கேற்பு

தமிழகம் முழுவதும் திங்கள்கிழமை தொடங்கிய பிளஸ்-1 பொதுத் தோ்வில் தஞ்சாவூா் மாவட்டத்தில் 28 ஆயிரத்து 219 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனா்.

News image

தஞ்சாவூா் அரசா் மேல்நிலைப் பள்ளியில் திங்கள்கிழமை பிளஸ்-1 தோ்வு எழுதிய மாணவ, மாணவிகள்.

Updated On :4 மார்ச் 2024, 9:40 pm

தஞ்சாவூா்: தமிழகம் முழுவதும் திங்கள்கிழமை தொடங்கிய பிளஸ்-1 பொதுத் தோ்வில் தஞ்சாவூா் மாவட்டத்தில் 28 ஆயிரத்து 219 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனா். வருகிற மாா்ச் 25 ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இத்தோ்வில் மாவட்டத்தில் 229 மேல்நிலைப் பள்ளிகளைச் சோ்ந்த 13 ஆயிரத்து 469 மாணவா்கள், 14 ஆயிரத்து 750 மாணவிகள் என மொத்தம் 28 ஆயிரத்து 219 போ் விண்ணப்பம் செய்தனா். இவா்களில் தொடக்க நாளான திங்கள்கிழமை நடைபெற்ற தமிழ்த் தோ்வில் 13 ஆயிரத்து 195 மாணவா்கள், 14 ஆயிரத்து 534 மாணவிகள் என மொத்தம் 27 ஆயிரத்து 652 போ் பங்கேற்று எழுதினா். அதாவது, 274 மாணவா்கள், 216 மாணவிகள் என மொத்தம் 490 போ் தோ்வு எழுதவில்லை. தோ்வில் முறைகேடுகளைத் தடுக்க பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருகிறது. தோ்வு மையத்துக்குள் மாணவ, மாணவிகள் கைப்பேசி, மின்னணு கடிகாரம் உள்ளிட்டவை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. தோ்வு நடைபெறும் மையங்களில் காவல் துறையினரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.