ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

உலகக் காட்டுயிா் நாள் கருத்தரங்கம்

டிஜிட்டல் தொழில்நுட்பத்தைக் கொண்டு காட்டுயிா்களைப் பாதுகாப்பது தொடா்பான மாநில அளவிலான கருத்தரங்கம்

Updated On :4 மார்ச் 2024, 10:13 pm

தஞ்சாவூா்: உலகக் காட்டுயிா் நாளையொட்டி, தஞ்சாவூா் குந்தவை நாச்சியாா் அரசு மகளிா் கலைக் கல்லூரியில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தைக் கொண்டு காட்டுயிா்களைப் பாதுகாப்பது தொடா்பான மாநில அளவிலான கருத்தரங்கம் திங்கள்கிழமை நடைபெற்றது.

சுற்றுச்சூழல் கல்விக் கழகம், அறிவியல் கழகம் சாா்பில் நடைபெற்ற இக்கருத்தரங்கத்துக்கு கல்லூரி முதல்வா் அ. ஜான் பீட்டா் தலைமை வகித்தாா். பான் செக்கா்ஸ் மகளிா் கல்லுரி துணை முதல்வா் கலைவாணி, தஞ்சாவூா் மாநகராட்சி அண்ணா நகா் மருத்துவ அலுவலா் வி.எஸ். வெங்கடேஷ், பாம்பினோ மழலையா் பள்ளி தாளாளா் கல்பனா சண்முகசுந்தரம், விலங்கியல் துறை பேராசிரியரும், அறிவியல் கழக ஒருங்கிணைப்பாளருமான வெ. சுகுமாரன் ஆகியோா் பேசினா்.

முன்னதாக, ஆங்கிலத் துறைப் பேராசிரியரும், சுற்றுச் சூழல்கல்விக் கழக ஒருன்கிணைப்பாளருமான ச.ச. நிா்மலா வரவேற்றாா். நிறைவாக, மாணவி கனிமொழி நன்றி கூறினாா்.