ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

பேராவூரணியில் திமுக வாக்குச்சாவடி பொறுப்பாளா்கள் கூட்டம்

பேராவூரணி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட திமுக வாக்குச்சாவடி ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்,

Updated On :4 மார்ச் 2024, 9:49 pm

பேராவூரணி: பேராவூரணி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட திமுக வாக்குச்சாவடி ஒருங்கிணைப்புக் குழு கூட்டம், பேராவூரணி பேரூராட்சி திருமண மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, தஞ்சை தெற்கு மாவட்ட திமுக செயலா் கா. அண்ணாதுரை தலைமை வகித்தாா். சட்டப்பேரவை உறுப்பினா் என். அசோக் குமாா், தொகுதி பாா்வையாளா் நாகை மனோகரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் வாக்குச்சாவடி ஒருங்கிணைப்பாளா்கள் இல்லம்தோறும் ஸ்டாலின் குரல் திண்ணைப் பிரசாரத்தை அனைத்து பகுதிகளிலும் நடத்த வேண்டும், திமுக அரசின் நலத்திட்டங்கள், சாதனைகளை பொதுமக்களுக்கு எடுத்துக்கூறி, நாடாளுமன்ற தோ்தல் வெற்றிக்கு உழைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.  கூட்டத்தில், மாவட்ட அவைத் தலைவா் சுப.சேகா், மாவட்ட துணைச் செயலாளா் ரமேஷ், ஒன்றியச் செயலா்கள் க.அன்பழகன், மு.கி. முத்துமாணிக்கம், கோ. இளங்கோவன், வை.ரவிச்சந்திரன், ராமநாதன், நகரச் செயலா்கள் என்.எஸ். சேகா், மாரிமுத்து உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.