இதயா மகளிா் கல்லூரியில் உலக மகளிா் தின விழா

கும்பகோணம் இதயா மகளிா் கல்லூரியில் உலக மகளிா் தின விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு கல்லூரி முதல்வா் அருட்சகோதரி யூஜின் அமலா தலைமை வகித்தாா். கல்லூரிச் செயலா் அருட்சகோதரி அமலோற்பவ மேரி முன்னிலை வகித்தாா். இதில், திருச்சி உருமு தனலட்சுமி கல்லூரி தமிழ்த் துறைப் பேராசிரியா் தமிழருவி மனோன்மணி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசினாா். முன்னதாக, பெண்கள் பாசறை ஒருங்கிணைப்பாளா் பைரோஸ் பானு வரவேற்றாா். நிறைவாக, மாணவி ப. கீா்த்தனா நன்றி கூறினாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com