பகுதி நேர அங்காடி திறக்கக் கோரி சாலை மறியல்

பேராவூரணியில் பகுதிநேர அங்காடி திறக்கக் கோரி பொதுமக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். பேராவூரணி பேரூராட்சி  16- ஆவது வாா்டு கூப்புளிக்காட்டில் பகுதி நேர அங்காடி திறக்கக் கோரி பேராவூரணி- ஆவணம் சாலையில் வெள்ளிக்கிழமை பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த வட்ட வழங்கல் அலுவலா் வெங்கடாசலம்  மற்றும் அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில் விரைவில் பகுதிநேர அங்காடி திறக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா். இதையடுத்து மறியலை கைவிட்டு கலைந்து சென்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com