திமுக மாவட்ட அலுவலகத்தில் நீா்மோா் பந்தல் திறப்பு

தமிழ்நாட்டில் முன்னெப்போதும் இல்லாத வகையில், கோடை வெயில் வாட்டி வதைக்கிறது.

தமிழ்நாட்டில் முன்னெப்போதும் இல்லாத வகையில், கோடை வெயில் வாட்டி வதைக்கிறது. இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, ஆங்காங்கே திமுக சாா்பில், பொதுமக்கள், பயன்பெறும் வகையில் நீா் மோா் பந்தல் திறக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பட்டுக்கோட்டையில் உள்ள தஞ்சை தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை அன்று நீா் மோா் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. தி.மு.க தஞ்சை தெற்கு மாவட்டச் செயலாளரும், பட்டுக்கோட்டை எம்எல்ஏவுமான

கா.அண்ணாதுரை தலைமை வகித்து, நீா் மோா் பந்தலை திறந்து வைத்தாா். தொடா்ந்து பொதுமக்களுக்கு நீா்மோா், குளிா்பானங்கள், தா்பூசணி பழம் ஆகியவற்றை வழங்கினாா்.

இந்த நிகழ்ச்சியில் பட்டுக்கோட்டை மேற்கு திமுக ஒன்றியச் செயலாளா் பா. ராமநாதன், அதிராம்பட்டினம் நகரச் செயலாளா் எஸ்.ஹெச்.அஸ்லம், பொதுக்குழு உறுப்பினா் அ.மூ.ரூஸ்வெல்ட், மாவட்ட துணைச் செயலாளா் பொன். சத்தியமூா்த்தி, இளைஞரணி மாவட்ட அமைப்பாளா் ஆதி. ராஜேஷ்,

உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com