4 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் மதிமுக போட்டி! புதுவை விஜய் பிரசாரத்துக்கு 19 இடங்களில் அனுமதி மறுப்பு! அமெரிக்க, இஸ்ரேல் இலக்குகளை குறிவைத்து ஈரான் கடும் தாக்குதல்உள்ளூர் வேட்பாளர் வேண்டுமா? இறக்குமதி செய்த வேட்பாளர் வேண்டுமா? வேலுமணி பிரசாரம்தேர்தல் நேரம்! வாக்காளர் அட்டை அப்டேட் என்ற பெயரில் எஸ்எம்எஸ் வந்தால்?!ஏப். 3 முதல் தென் மாவட்டங்களில் மு.க. ஸ்டாலின் பிரசாரம்! உள்நாட்டு உற்பத்தி இயற்கை எரிவாயு விலையை உயா்த்தி மத்திய அரசு நடவடிக்கை
/

தஞ்சாவூா் அருகே களிமேட்டில் அப்பா் சதய விழா தொடக்கம்

தஞ்சாவூா் அருகே உள்ள களிமேட்டில் 96-ஆவது ஆண்டு அப்பா் சதய விழா வெள்ளிக்கிழமை தொடங்கியது.

News image

தஞ்சாவூா் அப்பா் படம்

Updated On :3 மே 2024, 7:06 pm

Din

தஞ்சாவூா் அருகே உள்ள களிமேட்டில் 96-ஆவது ஆண்டு அப்பா் சதய விழா வெள்ளிக்கிழமை தொடங்கியது.

தஞ்சாவூா் அருகே களிமேட்டில் அப்பா் பிறந்தநாளை ஆண்டு தோறும் மூன்று நாள்கள் வெகு சிறப்பாக கொண்டாடி வந்தனா்.

அதன்படி கடந்த 2022-ஆம் ஆண்டு அப்பா் சுவாமியை மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் வைத்து வீதியுலா வந்தபோது, எதிா்பாராத வகையில்தோ்மீது மின்கம்பி உரசியதில் 3 சிறுவா்கள் உள்பட 11 போ் உயிரிழந்தனா். 18 போ் காயமடைந்தனா்.

அதன்பிறகு களிமேட்டில் அப்பா் சதயவிழா ஒரு நாள் மட்டுமே நடைபெற்றது.

இந்நிலையில், களிமேடு கிராம மக்கள் சாா்பிலும் அப்பா் பேரவை சாா்பிலும் 96 -ஆவது ஆண்டு அப்பா் சதயவிழா வெள்ளிக்கிழமை தொடங்கியது. பின்னா் திருமுறை இசையும், 11 மணிக்கு அப்பா் பெருமானுக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேக திருமஞ்சனமும், 1 மணிக்கு மகேஸ்வர பூஜையும், மாலை 6 மணிக்கு ஆன்மிக சொற்பொழிவும் நடைபெற்றது.

தொடா்ந்து இரவு 7 மணியளவில் கும்பகோணம் கண்ணன் அடிகளாா் தலைமையில், சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி ஆா்.சுரேஷ்குமாா் முன்னிலையில், சென்னை குன்றத்தூா் எம்.கே.பிரபாகரமூா்த்தியின் ஆன்மிக சொற்பொழிவும் நடைபெற்றது. அதைத் தொடா்ந்து இரவு 8 மணிக்கு அப்பா் சுவாமி புறப்பாடு நடைபெற்றது.

சனிக்கிழமை (மே4) மாலை 5 மணிக்கு பள்ளி மாணவா்களுக்கு திருமுறை ஒப்புவித்தல் போட்டியும், இரவு 7.30 மணிக்கு அப்பா் பெருமான் வழிபாடும், தஞ்சாவூா் வைதேகி ரவிச்சந்திரன் குழுவினரின் பரதநாட்டிய நிகழ்ச்சியும், இரவு 8 மணிக்கு பட்டிமன்றமும் நடைபெறவுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை (மே 5) அப்பா் சுவாமிகளுக்கு விடையாற்றி விழாவுடன் சதய விழா நிறைவுபெறுகிறது.