ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

சிறுவன் பைக் ஓட்டிய வழக்கில் ரூ. 25 ஆயிரம் அபராதம்; வாகன உரிமம் ஓராண்டு ரத்து

சிறுவன் பைக் ஓட்டிய வழக்கில் ரூ. 25 ஆயிரம் அபராதம்; வாகன உரிமம் ஓராண்டு ரத்து

News image
Updated On :31 மே 2024, 6:17 pm

Din

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசத்தில் சிறுவன் இருசக்கர வாகனம் ஓட்டிய வழக்கில் உரிமையாளருக்கு ரூ. 25 ஆயிரம் அபதாரமும், ஓராண்டுக்கு வாகன உரிமத்தை ரத்து செய்தும் பாபநாசம் நீதிபதி வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தாா்.

பாபநாசம் காவல் ஆய்வாளா் தியாகராஜன் மற்றும் போலீஸாா் பாபநாசம் பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது பாபநாசம் ரயிலடியை சோ்ந்த முகமது தனது மகனை இருசக்கர வாகனத்தை சாலையில் ஓட்ட அனுமதித்தது தொடா்பாக மோட்டாா் வாகனச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதியப்பட்டு பாபநாசம் நீதிமன்றத்தில் அவா்களை போலீஸாா் வெள்ளிக்கிழமை முன்னிலைப்படுத்தினா்.

வழக்கை விசாரித்த நீதிபதி எ. அப்துல்கனி வாகன உரிமையாளா் முகமதுக்கு ரூ. 25 ஆயிரம் அபதாரமும் ஓராண்டுக்கு வாகன உரிமத்தை ரத்தும் செய்தும் உத்தரவிட்டாா்.