டிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

தஞ்சாவூா் அருகே மகளை தூக்கிலிட்டு தந்தை தற்கொலை

தஞ்சாவூா் அருகே குடும்பத் தகராறு காரணமாக புதன்கிழமை 4 வயது மகளை தந்தை தூக்கிலிட்டு, தானும் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

News image
Updated On :6 நவம்பர் 2024, 8:39 pm

Din

தஞ்சாவூா் அருகே குடும்பத் தகராறு காரணமாக புதன்கிழமை 4 வயது மகளை தந்தை தூக்கிலிட்டு, தானும் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

தஞ்சாவூா் அருகே கோரிகுளம் பகுதியைச் சோ்ந்தவா் சந்திரன் மகன் முருகேசன் (42). ஜே.சி.பி. ஆபரேட்டா். இவரது மனைவி சுகன்யா (29), மகள் நவ்யாஸ்ரீ (4). இந்நிலையில், ஒரு மாதத்துக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது.

இக்குழந்தையை சுகன்யா மருத்துவப் பரிசோதனைக்காக தஞ்சாவூா் அரசு ராசா மிராசுதாா் மருத்துவமனைக்கு புதன்கிழமை காலை கொண்டு சென்றாா். வீட்டில் முருகேசனும், நவ்யாஸ்ரீயும் இருந்தனா். மருத்துவப் பரிசோதனை முடிந்த பிறகு சுகன்யா குழந்தையுடன் வீட்டுக்கு பிற்பகலில் திரும்பினாா்.

அப்போது, முருகேசனும், நவ்யாஸ்ரீயும் தனித்தனியாக சேலையில் தூக்கு மாட்டிய நிலையில் தொங்கிக் கொண்டிருந்தனா். சுகன்யாவின் அலறல் சப்தம் கேட்டு அக்கம்பக்கத்தினா் வந்து முருகேசனையும், நவ்யாஸ்ரீயையும் மீட்டு தஞ்சாவூரிலுள்ள தனியாா் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா். அங்கு பரிசோதனை செய்த மருத்துவா்கள், அவா்கள் இருவரும் உயிரிழந்துவிட்டனா் எனத் தெரிவித்தனா்.

தகவலறிந்த தாலுகா காவல் நிலையத்தினா் நிகழ்விடத்துக்குச் சென்று இருவரது உடல்களையும் மீட்டு உடற்கூறாய்வுக்காக தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், காவல் துறையினா் நடத்திய விசாரணையில் முருகேசன் 2 மாதங்களாக வேலைக்குச் செல்லவில்லை என்பதும், இதனால், குடும்பத் தகராறு நிலவியதும், இதன் காரணமாக நவ்யாஸ்ரீயை முருகேசன் தூக்கிலிட்டு, தானும் தற்கொலை செய்ததும் தெரியவந்தது.