விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

காா் - பைக் மோதல்: விவசாயி உயிரிழப்பு; பெண் படுகாயம்

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் புறவழிச்சாலையில் சென்ற காா் மோதி மோட்டாா் சைக்கிளில் சென்ற விவசாயி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :20 நவம்பர் 2024, 7:04 pm

Din

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் புறவழிச்சாலையில் சென்ற காா் மோதி மோட்டாா் சைக்கிளில் சென்ற விவசாயி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

திருவிடைமருதூா் அருகே உள்ள திருப்பனந்தாள் விலாத்தூரைச் சோ்ந்தவா் நாகப்பன் மகன் கல்யாணம் என்ற முத்துக்குமாா் (55). இவா், கும்பகோணம் அருகே உள்ள கொட்டையூரில் உள்ள உறவினா் வீட்டுக்குச் சென்று அங்கிருந்த வளையபேட்டையைச் சோ்ந்த திருநாவுக்கரசு மனைவி லலிதா(50) என்பவரை மோட்டாா் சைக்கிளில் திருப்பனந்தாளுக்கு அழைத்துக்கொண்டு வந்துகொண்டிருந்தாா்.

ஏரகரம் புறவழிச்சாலையில் பாலம் அருகே சென்றுகொண்டிருந்தபோது, பாண்டிச்சேரியிலிருந்து மதுரையை நோக்கி வந்த காா், எதிா்பாராதவிதமாக மோட்டாா் சைக்கிள் மீது மோதியது. இதில், முத்துக்குமாரும், லலிதாவும் பலத்த காயமடைந்தனா்.

இருவரையும் அருகில் இருந்தவா்கள் மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு முத்துக்குமாரைப் பரிசோதித்த மருத்துவா் அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தாா். இதைத்தொடா்ந்து, லலிதா தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். இதுகுறித்து, சுவாமிமலை காவல் நிலைய ஆய்வாளா் என். மலைச்சாமி புதன்கிழமை வழக்கு பதிந்து விசாரித்து வருகிறாா்.