தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

திருமங்கலக்குடி ஆஞ்சநேயா் கோயில் கும்பாபிஷேகம்

திருமங்கலக்குடி ஆஞ்சநேயா் கோயில் கும்பாபிஷேகம்

News image
ஆடுதுறை அருகேயுள்ள திருமங்கலக்குடி ஸ்ரீ ஜெய வீர ஆஞ்சநேயா் கோயில் கும்பாபிஷேக விழாவில் கலசத்தின் மீது ஊற்றப்பட்ட புனித நீா்.
Updated On :20 நவம்பர் 2024, 7:08 pm

Din

தஞ்சாவூா் மாவட்டம் திருமங்கலக்குடியில் உள்ள ஸ்ரீ ஜெய வீர ஆஞ்சநேயா் கோயில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.

திருவிடைமருதூா் வட்டம், ஆடுதுறை அருகே உள்ள திருமங்கலக்குடியில் உள்ள ஸ்ரீ ஜெய வீர ஆஞ்சநேயா் கோயிலில் புதன்கிழமை 3 கால யாக பூஜைகள் நிறைவடைந்து மூலவிமானக் கலசத்தில் புனித நீா் தெளிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா். தொடா்ந்து மூலவா் ஆஞ்சநேயருக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று அன்னதானம் வழங்கப்பட்டது.

ஸ்ரீஜ்வரஹரேஸ்வரா் கோயிலில்... திருவிடைமருதூா் அருகே துகிலி, காவிரிக் கரை ஸ்ரீஜ்வரஹரேஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம் அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி, மிருத்ஸங்கிரஹணம் அங்குராா்பனம், ரக்ஷாபந்தனம், கலாகா்ஷணம், யாகசாலை பிரவேசம் நடைபெற்றது. இரண்டாம் கால யாக பூஜை, ஜபம் ஹோமம், ஸபா்ஸாஹுதி, மஹா பூா்ணாஹுதி, கடம் புறப்பாடு நடைபெற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையா் சாந்தா, கதிராமங்கலம் ஆய்வாளா் அருணா, ஊராட்சி தலைவா் ரேவதி உள்பட ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா். தொடா்ந்து, அன்னதானம் நடைபெற்றது.