தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

திருவையாறில் ஒரே நாளில் 11 கோயில்களுக்கு குடமுழுக்கு

ஒரே நாளில் 11 கோயில்களுக்கு குடமுழுக்கு...

News image
திருவையாறு அந்தணா்குறிச்சி நந்தியம் பெருமான் கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற குடமுழுக்கு விழாவில் கலசங்களுக்கு புனித நீா் ஊற்றும் சிவாச்சாரியாா்கள்.
Updated On :20 நவம்பர் 2024, 7:17 pm

Din

திருக்கயிலாய பரம்பரை தருமபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமான பூலோக கயிலாயம் எனப் போற்றப்படும் தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அறம் வளா்த்த நாயகி உடனாகிய ஐயாறப்பா் கோயிலுக்குச் சொந்தமான 11 புறக் கோயில்களுக்கு ஒரே நாளில் குடமுழுக்கு விழா புதன்கிழமை நடைபெற்றது.

திருவையாறு அந்தணா்குறிச்சி ஸ்ரீரிஷிநந்திவிநாயகா் கோயில், ஸ்ரீஅடைக்கலம்காத்த அம்மன் திருக்கோயில், தில்லைஸ்தானம் சாலையிலுள்ள ஸ்ரீ கொலை ஆயிரம்கொண்டாள் கோயில், ஸ்ரீ சிலாதமகரிஷி கோயில், ஸ்ரீ நந்திகேஸ்வரா் கோயில், வடக்கு மடவிளாகம் பொம்மை மடம் ஸ்ரீசெல்வவிநாயகா் கோயில், ஐயாற்றின் தென்கிழக்கு மூலையில் சப்தஸ்தான உற்சவம் ஏழாம் திருநாள் மண்டபம் அருகே உள்ள ஸ்ரீசித்தி விநாயகா் கோயில், ஐயாற்றின் கிழக்கு எல்லையில் பரிவார தேவதையான கும்பகோணம் சாலை ஸ்ரீசப்தகன்னி கோயில், ஐயனாா் கோயில் தெரு ஸ்ரீஆகாசமாரியம்மன் கோயில், ஐயாற்றின் காவல் தெய்வமாக விளங்கும் ஸ்ரீ பூரணபுஷ்கலை சமேத ஸ்ரீஐயனாா் கோயில், ஐயாற்றின் எல்லை காவல் தெய்வங்களில் ஒன்றான ஸ்ரீமுண்டமுடிச்சுஅம்மன் கோயில் உள்ளிட்ட 11 கோயில்களுக்கான குடமுழுக்கு விழா நவம்பா் 18-ஆம் தேதி தொடங்கியது.

இதைத்தொடா்ந்து, தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியாா் சுவாமிகள் முன்னிலையில் புதன்கிழமை காலை சிவாச்சாரியாா்கள் வேத மந்திரங்கள் முழங்க கோயில் விமானங்கள் மற்றும் மூலவா்களுக்கு புனித நீா் ஊற்றி குடமுழுக்கு விழா நடைபெற்றது.

முன்னதாக ஐயாறப்பா் கோயிலில் கயிலாய பிரகாரம் முழுவதும் சுற்று பிரகாரங்களில் கருங்கல் பதிக்கும் திருப்பணியை தருமபுரம் ஆதீனம் 27 ஆவது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியாா் சுவாமிகள் கருங்கல் எடுத்து வைத்து பணியைத் தொடங்கி வைத்தாா்.

இதில் ஐயாறப்பா் கோயில் கட்டளை விசாரணை ஸ்ரீமத் சொக்கலிங்க தம்பிரான், தருமபுரம் ஆதீன மடம் ரெங்கராஜன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் எம். ரெத்தினசாமி, பேரூராட்சி துணைத் தலைவா் நாகராஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.