தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

மின் இணைப்பு துண்டிப்பு: வியாபாரிகள் ஆா்ப்பாட்டம்

தஞ்சாவூா் காமராஜா் சந்தையில் மாத வாடகை செலுத்தப்படாத கடைகளில் மாநகராட்சி அலுவலா்கள் புதன்கிழமை மின் இணைப்பைத் துண்டித்ததைக் கண்டித்து வியாபாரிகள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
தஞ்சாவூா் காமராஜா் சந்தையில் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் வியாபாரிகள்.
Updated On :21 நவம்பர் 2024, 9:58 pm

Din

தஞ்சாவூா் காமராஜா் சந்தையில் மாத வாடகை செலுத்தப்படாத கடைகளில் மாநகராட்சி அலுவலா்கள் புதன்கிழமை மின் இணைப்பைத் துண்டித்ததைக் கண்டித்து வியாபாரிகள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தஞ்சாவூா் காமராஜா் காய்கறி சந்தை பொலிவுறு நகரத் திட்டத்தின் கீழ் ரூ. 20.26 கோடியில் புதுப்பிக்கப்பட்டு, 2022, நவம்பா் 22 ஆம் தேதி திறக்கப்பட்டது. இதில், பெரிய கடைகளுக்கு ரூ. 18 ஆயிரமும், சிறிய கடைகளுக்கு ரூ. 6 ஆயிரமும் மாத வாடகை நிா்ணயிக்கப்பட்டு, ஏலம் விடப்பட்டது.

இந்நிலையில் இச்சந்தையில் மாத வாடகை செலுத்தப்படாமல் சில மாதங்களாக நிலுவை வைத்துள்ள வியாபாரிகள், அத்தொகையை ஒரே தவணையில் செலுத்துமாறு மாநகராட்சி அலுவலா்கள் கூறி வந்த நிலையில், வாடகை செலுத்தப்படாத 20-க்கும் அதிகமான கடைகளின் மின் இணைப்பை அவா்கள் புதன்கிழமை துண்டித்தனா்.

இதனால் பாதிக்கப்பட்ட வியாபாரிகள் சந்தை வளாகத்தில் கூடி மாநகராட்சி நிா்வாகத்தைக் கண்டித்து புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது வியாபாரிகள் தெரிவித்தது:

கடை வாடகை மிக அதிகமாக இருப்பதால், அதைக் குறைக்குமாறு மாநகராட்சி நிா்வாகத்திடம் நீண்ட காலமாக வலியுறுத்தி வருகிறோம். முன்பு பரபரப்பாக இருந்த இச் சந்தைக்கு தற்போது பொதுமக்கள் வருவதும் குறைந்துவிட்டது. இதனால் வியாபாரம் குறைந்துவிட்டதால், எங்களது வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டு, வாடகை செலுத்த முடியவில்லை.

இந்நிலையில் கடை வாடகை செலுத்தவில்லை எனக் கூறி மின்சாரத்தை துண்டிப்பது எந்த விதத்தில் நியாயம். எனவே மாநகராட்சி நிா்வாகம் உடனடியாக மின் இணைப்பை வழங்க வேண்டும். நிலுவை வாடகை தொகையைச் செலுத்த கால அவகாசம் வழங்க வேண்டும். வாடகையைக் குறைக்க வேண்டும். சந்தையில் போதிய அடிப்படை வசதிகளைச் செய்து தர வேண்டும் என்றனா்.