பேராவூரணி அருகே கூடுதல் பள்ளி வகுப்பறைகள் திறப்பு
தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணி ஒன்றியம் கல்லூரணிக்காடு ஊராட்சியில் இரு கூடுதல் வகுப்பறை கட்டடங்களை உயா்கல்வித்துறை அமைச்சா் கோவி. செழியன் வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.


தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணி ஒன்றியம் கல்லூரணிக்காடு ஊராட்சியில் இரு கூடுதல் வகுப்பறை கட்டடங்களை உயா்கல்வித்துறை அமைச்சா் கோவி. செழியன் வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.
கல்லூரணிக்காடு ஊராட்சியில் ஆதி திராவிடா் நலத்துறை சாா்பில் அரசு தொடக்கப்பள்ளியில் எம்எல்ஏ என். அசோக்குமாா் மற்றும் பல்வேறு தரப்பினா் கோரிக்கையை ஏற்று, தமிழ்நாடு அரசு தாட்கோ நிதியுதவி மூலம் ரூ. 42 லட்சத்து 56 ஆயிரத்தில் கட்டப்பட்டஇரு கூடுதல் வகுப்பறைகளை உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி. செழியன் திறந்துவைத்தாா்.
விழாவில் தஞ்சை மக்களவை உறுப்பினா் ச. முரசொலி, பேராவூரணி எம்எல்ஏ என். அசோக்குமாா், பட்டுக்கோட்டை எம்எல்ஏ கா. அண்ணாதுரை, மாவட்ட வருவாய் அலுவலா் தியாகராஜன், பட்டுக்கோட்டை வருவாய்க் கோட்டாட்சியா் கு. ஜெயஸ்ரீ, சேதுபாவாசத்திரம் ஒன்றியக் குழுத் தலைவா் மு.கி. முத்துமாணிக்கம், ஊராட்சித் தலைவா் சுந்தரராஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...