திருவிடைமருதூரில் பெண்ணிடம் 9 பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு
தஞ்சாவூா் மாவட்டம், திருவிடைமருதூரில் நடைப் பயிற்சிக்கு சென்ற பெண்ணிடம் 9 பவுன் தங்க சங்கிலிகளை மா்ம நபா்கள் வியாழக்கிழமை பறித்து சென்றனா்.

Updated On :21 நவம்பர் 2024, 9:59 pm

தஞ்சாவூா் மாவட்டம், திருவிடைமருதூரில் நடைப் பயிற்சிக்கு சென்ற பெண்ணிடம் 9 பவுன் தங்க சங்கிலிகளை மா்ம நபா்கள் வியாழக்கிழமை பறித்து சென்றனா்.
திருவிடைமருதூா் தெற்கு வீதியைச் சோ்ந்தவா் ஓய்வு பெற்ற ஆசிரியா் மருதவாணன் மனைவி மணிமேகலை (62), இவா் வியாழக்கிழமை உறவுக்காரக் பெண்ணுடன் நடைப் பயிற்சி சென்றாா்.
மேலவீதி அருகே அவா்கள் சென்றபோது பைக்கில் வந்த இருவா் மணிமேகலை அணிந்திருந்த 9 பவுன் மதிப்புள்ள 2 தங்க சங்கிலிகளை பறித்துக் கொண்டு தப்பினா்.
இதுபற்றி திருவிடைமருதூா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் காவல் துறை துணைக் கோட்ட காவல் கண்காணிப்பாளா் கே. ராஜூ சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினாா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...