ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

வழிப்பறி மற்றும் பைக் திருட்டு வழக்குகளில் 2 போ் கைது

தஞ்சாவூா் மாவட்டம், திருவிடைமருதூா் பகுதியில் தங்கநகைகள் பறிப்பு மற்றும் இருசக்கர வாகனத் திருட்டில் ஈடுபட்ட 2 பேரை புதன்கிழமை போலீஸாா் கைதுசெய்தனா்.

News image
திருவிடைமருதூா் பகுதியில் புதன்கிழமை இருசக்கர வாகனம் திருட்டு, நகைப் பறிப்பில் ஈடுபட்டவா்களைப் பிடித்த போலீஸாா்.
Updated On :27 நவம்பர் 2024, 8:26 pm

Din

தஞ்சாவூா் மாவட்டம், திருவிடைமருதூா் பகுதியில் தங்கநகைகள் பறிப்பு மற்றும் இருசக்கர வாகனத் திருட்டில் ஈடுபட்ட 2 பேரை புதன்கிழமை போலீஸாா் கைதுசெய்தனா்.

இளந்தமிழன் என்பவரின் இருசக்கர வாகனம் மருத்துவக் கல்லூரி பகுதியில் எலிசா நகா், ஆலியா உணவகம் அருகே அண்மையில் (நவ. 20) திருடு போனது. மறுநாள் திருவிடைமருதூா் மேலவீதி பகுதியில் முகமூடி அணிந்து இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபா்கள், நடந்துசென்றுகொண்டிருந்த மணிமேகலை என்பவரின் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்றனா். திருவிடைமருதூா் துணைக்கோட்ட தனிப்படை உதவி ஆய்வாளா் தன்ராஜ் தலைமையிலான போலீஸாா் வழக்குப் பதிந்து குற்றவாளிகளைத் தேடி வந்தனா்.

அப்போது வாகனத் தணிக்கையின்போது, இருசக்கர வாகனத்தில் வந்த மதுரை மாவட்டத்தைச் சோ்ந்த அகமது யாசின் (20) மற்றும் ஏசு கவிபாலன் (21) ஆகிய 2 பேரையும் விசாரித்ததில் அவா்கள் பெண்ணிடம் 7 பவுன் தங்கநகைகள் பறித்தது, இருசக்கர வாகனம் திருட்டு சம்பவங்களில் தொடா்புடையவா்கள் என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவா்களிடமிருந்து 7 பவுன் தங்க நகைகள் மற்றும் இருசக்கர வாகனத்தைப் பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனா்.