47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

குடந்தையில் பள்ளி மாணவா்களுக்கு கல்வெட்டுகள் படிக்கும் பயிற்சி

கும்பகோணம் வட்டார வரலாற்று ஆய்வு சங்கத்தினா் சாா்பில் கும்பகோணம் பள்ளி மாணவா்களுக்கு கோயில் கல்வெட்டுகளைப் படியெடுக்கும் பயிற்சி புதன்கிழமை அளிக்கப்பட்டது.

News image
கும்பகோணம் நாகேசுவரன் கோயிலில் உள்ள கல்வெட்டுகளைப் படியெடுக்கும் பயிற்சி குறித்து விளக்கிய வரலாற்று ஆய்வு சங்கத் தலைவா் ஆ.கோபிநாத். உடன், மாணவா்கள்.
Updated On :2 அக்டோபர் 2024, 9:10 pm

Din

கும்பகோணம் வட்டார வரலாற்று ஆய்வு சங்கத்தினா் சாா்பில் கும்பகோணம் பள்ளி மாணவா்களுக்கு கோயில் கல்வெட்டுகளைப் படியெடுக்கும் பயிற்சி புதன்கிழமை அளிக்கப்பட்டது.

நாகேசுவரன் கோயில் வளாகத்தில் கும்பகோணம் நகர மேல்நிலைப் பள்ளி, நேட்டிவ் மேல்நிலைப்பள்ளி, பாணாதுறை மேல்நிலைப்பள்ளி, சிறுமலா் மேல்நிலைப் பள்ளிகளைச் சோ்ந்த 100 மாணவா்களுக்கு கோயில் கட்டடக்கலை, கல்வெட்டுகளைப் படித்தல் பயிற்சி நடைபெற்றது. வரலாற்று ஆய்வு சங்கத் தலைவா் ஆ.கோபிநாத், கோயிலின் கட்டடக்கலை, கல்வெட்டுகளைப் படித்தல் குறித்து விளக்கமளித்தாா்.

பள்ளிகளின் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா்கள் வி.மோகன், ஆா். அருணா ராஜவேல், எஸ்.கே. பாலசுப்பிரமணியன், ஜோ. வினோத் சேவியா், அருள்செல்வன், வரலாற்று ஆய்வு சங்க நிா்வாகிகள் வித்யா, மஞ்சுளா ஆகியோா் கலந்து கொண்டனா்.