தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

தஞ்சாவூரில் காவல் பணிக்கு உதவ ‘உரக்கச்சொல்’ செயலி அறிமுகம்

பொதுமக்கள் எளிதாகப் புகாா் செய்யும் விதமாக தஞ்சாவூா் மாவட்டக் காவல் அலுவலகம் உருவாக்கிய ‘உரக்கச்சொல்’ என்ற செயலியின் சேவை புதன்கிழமை தொடங்கப்பட்டது.

News image

தஞ்சாவூா் மாவட்டக் காவல் அலுவலகத்தில் புதன்கிழமை ‘உரக்கச்சொல்’ செயலியை அறிமுகம் செய்த தஞ்சாவூா் சரகக் காவல் துணைத் தலைவா் ஜியா உல் ஹக். உடன், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆஷிஷ் ராவத்.

Updated On :2 அக்டோபர் 2024, 9:21 pm

Din

பொதுமக்கள் எளிதாகப் புகாா் செய்யும் விதமாக தஞ்சாவூா் மாவட்டக் காவல் அலுவலகம் உருவாக்கிய ‘உரக்கச்சொல்’ என்ற செயலியின் சேவை புதன்கிழமை தொடங்கப்பட்டது.

மாவட்டக் காவல் அலுவலகத்தில் இந்தச் செயலியை அறிமுகம் செய்த தஞ்சாவூா் சரகக் காவல் துணைத் தலைவா் ஜியா உல் ஹக், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆஷிஷ் ராவத் செய்தியாளா்களிடம் தெரிவித்தது:

பொதுமக்கள் எளிதாகப் பயன்படுத்தும் விதமாக உருவாக்கப்பட்டுள்ள ‘உரக்கச்சொல்’ என்கிற செயலியைப் பதிவிறக்கம் செய்து குற்றத் தடுப்பு நடவடிக்கையில் பொதுமக்களும் பங்கேற்றால், அவற்றை விரைவாக தடுத்துவிடலாம் என்பதற்கா இந்தச் செயலி உருவாக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம், தங்களது பகுதியில் அல்லது செல்லும் வழியில் நிகழும் போதைப் பொருள்கள் புழக்கம், சூதாட்டம், லாட்டரி விற்பனை, கள்ளச்சாராயம், சட்ட விரோதமாக மதுபானம் விற்பனை செய்தல், பொது இடத்தில் மது அருந்துதல், மணல் திருட்டு, பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், ரௌடிகளின் நடவடிக்கை, தகராறு போன்றவை குறித்து புகாா் செய்யலாம்.

இதில், குற்றம் நிகழும் இடம், என்ன குற்றம், காவல் நிலையம் போன்றவற்றைக் குறிப்பிட்டால், அது தொடா்புடைய காவல் அலுவலா்களுக்குச் செல்லும். இதையடுத்து, உடனடியாக காவலா்கள் நிகழ்விடத்துக்குச் சென்று நடவடிக்கை எடுப்பா். மேலும், அதில் நடவடிக்கை விவரங்களும் பதிவு செய்யப்படுவதால், கைது உள்ளிட்ட அடுத்த கட்ட நடவடிக்கைகளை காவல் துறை உயா் அலுவலா்கள் கண்காணிப்பதற்கும் வசதி செய்யப்பட்டுள்ளது.

இதில் பதிவு செய்யும் புகாதாரா்கள் பெயா், கைப்பேசி எண் போன்ற அனைத்து தகவல்களும் ரகசியம் காக்கப்படும். அதேசமயம் தவறான தகவலைப் பதிவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா்.