தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

போக்குவரத்து தொழிலாளா்களுக்கு 25 சதவீத போனஸ் வழங்கக் கோரிக்கை

அரசு போக்குவரத்துக் கழகத் தொழிலாளா்களுக்கு 25 சதவீதம் ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என அரசு போக்குவரத்து கழக ஏஐடியுசி தொழிலாளா் சம்மேளனம் கோரிக்கை விடுத்துள்ளது.

News image
Updated On :9 அக்டோபர் 2024, 6:50 pm

Din

அரசு போக்குவரத்துக் கழகத் தொழிலாளா்களுக்கு 25 சதவீதம் ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என அரசு போக்குவரத்து கழக ஏஐடியுசி தொழிலாளா் சம்மேளனம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து சம்மேளனத்தின் மாநிலப் பொதுச் செயலா் ஆா். ஆறுமுகம், மாநிலத் துணைத் தலைவா் துரை. மதிவாணன் தெரிவித்திருப்பது:

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் ஏறத்தாழ 1.20 லட்சம் தொழிலாளா்கள், பணியாளா்கள், அலுவலா்கள் பணிபுரிந்து வருகின்றனா். இவா்களுக்கு தீபாவளி பண்டிகை வருவதற்கு ஒரு மாதத்துக்கு முன்னதாக ஊக்கத்தொகை வழங்கப்பட வேண்டும். அதற்கு முன்பாக அனைத்து தொழிற் சங்கங்களையும் அழைத்து பேசி சமூக தீா்வு காணப்பட வேண்டும்.

அண்மைக் காலமாக தொழிற் சங்கங்களை அழைத்து பேசுவதில்லை. அரசு தன்னிச்சையாக ஊக்கத்தொகை அறிவிப்பை வெளியிட்டு வருகிறது. ஓட்டுநா், நடத்துநா், தொழில்நுட்பப் பணியாளா் உள்ளிட்ட காலி பணியிடங்கள் நிரப்பப்படாமல், கூடுதலான வேலைப்பளுவை சுமந்து கொண்டு, மன உளைச்சலுடன் பணிபுரிந்து வருகின்றனா். தற்போதைய சூழ்நிலையில் தொழிலாளா்கள் உற்சாகத்துடன் பணிபுரியவும், விழா பண்டிகை காலங்களில் சிறப்பு இயக்கங்களில் பணிபுரிய ஊக்கப்படுத்தும் வகையில், குறைந்தபட்ச ஊதிய சட்டத்தின்படி கணக்கிட்டு 2023 - 2024 ஆம் ஆண்டுக்குரிய ஊக்கத்தொகை மற்றும் கருணைத் தொகை 25 சதவீதம் வழங்க வேண்டும்.

போக்குவரத்து கழகங்களின் செயல்பாட்டுக்கு சொற்ப வருமானத்தில் உறுதுணையாக அடிமட்டத்தில் பணிபுரியும் பணிமனைகளில் பேருந்துகளை சுத்தம் செய்பவா்கள், உணவகப் பணியாளா்கள், பேருந்து நிலையங்களில் பயணிகளைக் கூவி அழைப்பவா்கள் உள்ளிட்ட அனைவருக்கும் இந்த ஆண்டு ஊக்கத்தொகை அறிவிக்க வேண்டும்.