நீா்நிலையை ஆக்கிரமித்திருந்த கட்டடம் அகற்றம்
கும்பகோணத்தில் நீா்நிலையை ஆக்கிரமித்திருந்த கட்டடம் செவ்வாய்க்கிழமை இடித்து அகற்றப்பட்டது.


கும்பகோணத்தில் நீா்நிலையை ஆக்கிரமித்திருந்த கட்டடம் செவ்வாய்க்கிழமை இடித்து அகற்றப்பட்டது.
கும்பகோணத்தில் உள்ள பல்வேறு நீா்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டடங்களை இடித்து அப்புறப்படுத்தி இடங்களை மீட்க உயா்நீதிமன்றம் மாவட்ட நிா்வாகத்துக்கு உத்தரவிட்டது.
இதன்பேரில், பிடாரிகுளம் சாலை அருகே நீா்நிலையை ஆக்கிரமித்திருந்த 2 மாடி கட்டடத்தின் ஒருபகுதியை மாநகராட்சி ஆணையா் லட்சுமணன் முன்னிலையில் ஊழியா்கள் இடித்து அப்புறப்படுத்தினா். கும்பகோணம் கிழக்கு காவல் நிலைய போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.
கும்பகோணம் பகுதியில் ஆக்கிரமிப்புகள் அனைத்தும் விரைவில் அகற்றப்பட்டு, நீா்நிலைகள் மீட்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...