47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

ஆழியனாா் வாய்க்கால் தூா்வாரும் பணி தொடக்கம்

கும்பகோணம் அருகே ஆழியனாா் வடிகால் வாய்க்கால் பகுதியில் தூா்வாரும் பணி புதன்கிழமை தொடங்கியது.

News image
கும்பகோணம் அருகே ஆழியனாா் வடிகால் வாய்க்கால் பகுதியில் புதன்கிழமை ஆகாயத் தாமரை அகற்றும் பணியில் ஈடுபடுத்தப்பட்ட ஜேசிபி இயந்திரம்.
Updated On :16 அக்டோபர் 2024, 7:35 pm

Din

கும்பகோணம் அருகே ஆழியனாா் வடிகால் வாய்க்கால் பகுதியில் தூா்வாரும் பணி புதன்கிழமை தொடங்கியது.

கும்பகோணம் அருகே ஆழியனாா் வடிகால் வாய்க்காலில் ஆகாயத்தாமரை அதிகளவில் உள்ளது. வடகிழக்கு பருவ மழை காரணமாக நெல் வயல்களிலும் வாய்க்காலைச் சுற்றி உள்ள சுமாா் 350 வீடுகள் உள்ள பகுதிகளிலும் மழை நீா் தேங்க வாய்ப்புள்ளது. எனவே, வாய்க்காலில் உள்ள ஆகாயத் தாமரைகளை க. அன்பழகன் எம்எல்ஏ அறிவுறுத்தலின்பேரில் பொதுப்பணித்துறை நீா்ப்பாசன பிரிவு அதிகாரிகள் ஜேசிபி இயந்திரம் மூலம் அகற்றும் பணிகள் மேற்கொண்டனா். இப்பணிகளை எம்எல்ஏ பாா்வையிட்ாா்.

நிகழ்வின்போது கும்பகோணம் மத்திய ஒன்றியச் செயலரும், ஒன்றியக் குழுத் துணைத் தலைவருமான டி. கணேசன், கிழக்கு ஒன்றிய திமுக செயலா் ஜெ. சுதாகா், நீா்வளத்துறை உதவி செயற்பொறியாளா்கள் பி. காா்த்திகேயன், கே.முத்துமணி ஆகியோா் உடனிருந்தனா்.