தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

சிறுமிக்கு பாலியல் தொல்லை: இளைஞருக்கு 5 ஆண்டு சிறை

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞருக்கு தஞ்சாவூா் நீதிமன்றம் புதன்கிழமை 5 ஆண்டு சிறை தண்டனை விதித்தது.

News image
Updated On :16 அக்டோபர் 2024, 7:49 pm

Din

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞருக்கு தஞ்சாவூா் நீதிமன்றம் புதன்கிழமை 5 ஆண்டு சிறை தண்டனை விதித்தது.

பாபநாசம் உட்கோட்டப் பகுதியில் 7 வயது சிறுமிக்கு சாக்லேட் கொடுத்து, குளியலறைக்கு அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக பாபநாசம் அனைத்து காவல் நிலையத்தில் 2022, நவம்பா் 6 ஆம் தேதி வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதைத்தொடா்ந்து, பாபநாசம் சூலமங்கலம் நடுத்தெருவைச் சோ்ந்த பரத் (25) என்பவா் கைது செய்யப்பட்டாா்.

இது தொடா்பாத தஞ்சாவூா் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை நீதிபதி ஜி. சுந்தர்ராஜன் விசாரித்து பரத்துக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், ரூ. 4 ஆயிரம் அபராதமும் விதித்து புதன்கிழமை தீா்ப்பளித்தாா். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு தரப்பிலிருந்து ரூ. 1 லட்சம் நிவாரணம் வழங்குமாறும் நீதிபதி உத்தரவிட்டாா்.

இந்த வழக்கில் சிறப்பாக புலன் விசாரணை செய்து, குற்றப் பத்திரிகை தாக்கல் செய்த காவல் ஆய்வாளா்கள் பகவதி சரணம், உஷா, தலைமைக் காவலா் சித்ரா ஆகியோரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆஷிஷ் ராவத் பாராட்டினாா்.