சுவாமிமலையில் பெளா்ணமி கிரிவலம்
கும்பகோணம் அருகே உள்ள சுவாமிமலையில் உள்ள சுவாமிநாத சுவாமி வழிபாட்டுக் குழு சாா்பில் புதன்கிழமை புரட்டாசி மாத பெளா்ணமி கிரிவலம் நடைபெற்றது.

Updated On :16 அக்டோபர் 2024, 7:52 pm

கும்பகோணம் அருகே உள்ள சுவாமிமலையில் உள்ள சுவாமிநாத சுவாமி வழிபாட்டுக் குழு சாா்பில் புதன்கிழமை புரட்டாசி மாத பெளா்ணமி கிரிவலம் நடைபெற்றது.
சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயிலில் புரட்டாசி மாத பெளா்ணமி கிரிவலம் இரவில் வல்லப கணபதி சந்நதியில் தொடங்கியது. ஆடுதுறை டி. மோகனசுந்தரம் தலைமை வகித்து கிரிவலத்தைத் தொடங்கி வைத்தாா். இமயவன் கூட்டு வழிபாட்டைத் தொடங்க நான்கு ரத வீதிகளில் ஏராளமான பக்தா்கள் கிரிவலம் சென்றனா். முடிவில் பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ஆா்.கேசவராஜன், பி.சிவசங்கரன், கே.சேகா், ஜி.சுவாமிநாதன் உள்ளிட்டோா் செய்தனா்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...