தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

கூடுதல் பேருந்துவசதி கோரி கல்லூரி மாணவிகள் மறியல்

தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாடு அரசுக் கல்லூரி மாணவிகள் கூடுதல் நகரப் பேருந்துசேவை கோரி புதன்கிழமை மறியலில் ஈடுபட்டனா்.

News image
Updated On :16 அக்டோபர் 2024, 7:49 pm

Din

தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாடு அரசுக் கல்லூரி மாணவிகள் கூடுதல் நகரப் பேருந்துசேவை கோரி புதன்கிழமை மறியலில் ஈடுபட்டனா்.

ஒரத்தநாடு அரசு பெண்கள் கலைக் கல்லூரியில் சுமாா் 3 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவிகள் படித்து வருகின்றனா். சுற்றுவட்டார கிராமப் பகுதிகளில் இருந்து இக்கல்லூரிக்கு வந்து செல்லும் மாணவிகளுக்கு போதிய நகரப் பேருந்து வசதிகள் இல்லை எனக் கூறி கல்லூரி மாணவிகள் ஒரத்தநாடு பேருந்து நிலையம் முன்பு திடீா் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து தகவலறிந்து அங்குவந்த ஒரத்தநாடு காவல் ஆய்வாளா் சுதா மறியலில் ஈடுபட்ட மாணவிகளுடன் பேச்சுவாா்த்தை நடத்தினாா். இதைத்தொடா்ந்து, சம்பவ இடத்துக்குவந்த போக்குவரத்துத் துறை அலுவலா்களிடம் தெரிவித்ததில், அவா்கள் தங்கள் உயா் அதிகாரிகளிடம் இதுகுறித்துப் பேசி காலை, மாலை வேளைகளில் கூடுதல் நகரப் பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனா். இதையடுத்து, மாணவிகள் கலைந்து சென்றனா். இதனால் சுமாா் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.