கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

அரசு இடத்தை ஆக்கிரமித்த விவகாரம் வருவாய், பதிவுத்துறை அலுவலா்கள் மீது நடவடிக்கை கோரி பொதுமக்கள் மறியல்

அரசு இடத்தை ஆக்கிரமித்த விவகாரம் வருவாய், பதிவுத்துறை அலுவலா்கள் மீது நடவடிக்கை கோரி பொதுமக்கள் மறியல்

News image
பட்டுக்கோட்டை அருகே உள்ள இடையாத்தில் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள்.
Updated On :17 அக்டோபர் 2024, 8:40 pm

Din

பட்டுக்கோட்டை அருகே உள்ள இடையாத்தியில் அரசு இடத்தை முறைகேடாக பதிவு செய்து ஆக்கிரமிக்கப்பட்ட விவகாரத்தில் வருவாய், பதிவுத்துறை அலுவலா்கள் மீது நடவடிக்கை கோரி வியாழக்கிழமை சாலை மறியல் போராட்டம் நடைப்பெற்றது.

தஞ்சாவூா் மாவட்டம், திருவோணம் அருகே இடையாத்தி கிராமத்தில் பசுக்காரன்தெருவில், சுமாா் 40 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வந்த அங்கன்வாடி மற்றும் குடிநீா் தொட்டி இருந்த இடத்தை தனிநபா்கள் திட்டமிட்டு வருவாய்துறை அதிகாரிகள், பதிவுத்துறை அதிகாரிகள் உதவியுடன் பதிவு செய்து ஆக்கிரமிப்பு செய்தனா்.

இந்த விவகாரத்தில் பட்டுக்கோட்டை ஆா்.டி.ஓ., திருவோணம் வட்டாட்சியா் ஆகியோா் சம்பந்தப்பட்ட இடத்தை நேரில் ஆய்வு செய்து விசாரணை நடத்தினா். விசாரணையில், வருவாய்துறை அதிகாரிகள், பதிவுத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோா் பலா் கூட்டுசோ்ந்து முறைகேடாக ஆவணம் பதிவு செய்தது தெரியவந்தது. அதன்பேரில், வி.ஏ.ஓ செல்வராஜ், உதவியாளா் அன்பழகன் இருவரும் கடந்த ஆகஸ்ட் 29-ஆம் தேதி பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.

இந்நிலையில், முறைகேட்டில் ஈடுபட்ட ஆவண எழுத்தா், சாா்-பதிவாளா் மற்றும் இதில் தொடா்புள்ள எழுதி கொடுத்தவா், எழுதி வாங்கியவா் உள்ளிட்ட பலா் மீது வாட்டாத்திக்கோட்டை போலீஸில் புகாா் அளிக்கப்பட்டது.

ஆனால், புகாா் மீது இதுவரை எவ்வித கைது நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம். இதனை கண்டித்தும், மோசடியாக ஆவணங்களை பதிவு செய்த வருவாய்த்துறை மற்றும் பதிவுத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் இடையாத்தி கடைத்தெருவில் கிாரம மக்கள், விவசாயிகள், அனைத்துக் கட்சியினா் என நூற்றுக்கணக்கனோா் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். இதையடுத்து அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸாா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களை போலீசாா் கைது செய்தனா்.