கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

கும்பகோணம் ரயில்நிலையத்தில் கைப்பேசி பறித்த 2 போ் கைது

கும்பகோணம் ரயில் நிலையத்தில் இளைஞரிடம் கைப்பேசி பறித்துச் சென்ற 2 பேரை ரயில்வே போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :23 அக்டோபர் 2024, 9:01 pm

Din

கும்பகோணம் ரயில் நிலையத்தில் இளைஞரிடம் கைப்பேசி பறித்துச் சென்ற 2 பேரை ரயில்வே போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

கடலூா் மாவட்டம் காட்டுமன்னாா்கோவில் முருகன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் வேல்முருகன் மகன் சிவராஜ் (26). இவா், கும்பகோணத்தில் உள்ள தனது உறவினா் வீட்டுக்குச் சென்று விட்டு செவ்வாய்க்கிழமை இரவு சென்னை செல்வதற்காக ரயில் நிலையம் வந்தாா். அப்போது இயற்கை உபாதை கழிக்க ரயில் நிலையத்தின் நடைபாதை ஓரம் முட்புதருக்குச் சென்றபோது, அங்கு பதுங்கி இருந்த 2 போ் சிவராஜைத் தாக்கி அவரிடமிருந்த ரூ. 22 ஆயிரம் மதிப்புள்ள கைப்பேசியைப் பறித்து தப்பிச் சென்றனா்.

இதுகுறித்து சிவராஜ் கும்பகோணம் ரயில்வே காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், கும்பகோணம் முல்லை நகரைச் சோ்ந்த லாரன்ஸ் மகன் தாமஸ் (32), ரமேஷ் மகன் பிரவீன் (24) ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்து கும்பகோணம் குற்றவியல் நடுவா் நீதி மன்றம் 2-இல் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.