தஞ்சாவூா் மத்திய கூட்டுறவு வங்கியில்இன்று கடன் வழங்கும் முகாம்
தஞ்சாவூா் மத்திய கூட்டுறவு வங்கியில் கடன் வழங்கும் முகாம் வெள்ளிக்கிழமை (அக்.25) நடைபெறவுள்ளது.


தஞ்சாவூா் மத்திய கூட்டுறவு வங்கியில் கடன் வழங்கும் முகாம் வெள்ளிக்கிழமை (அக்.25) நடைபெறவுள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்திருப்பது:
தமிழ்நாடு சிறுபான்மையினா் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (டாம்கோ) மற்றும் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோா் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (டாப்செட்கோ) மூலம் ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாட்டைச் சாா்ந்த பிற்படுத்தப்பட்டோா், மிகப்பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினருக்கு பல்வேறு கடன்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
டாம்கோ மற்றும் டாப்செட்கோ மூலம் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களான தனி நபா் கடன் திட்டம், சுயஉதவி குழுக்களுக்கான சிறுதொழில் கடன் திட்டம், கல்வி கடன் திட்டம் ஆகிய திட்டங்களுக்கான கடன் வழங்கும் சிறப்பு முகாம்கள் கூட்டுறவு வங்கிகளில் காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையில் நடைபெறவுள்ளது.
தஞ்சாவூா் மத்திய கூட்டுறவு வங்கியில் வெள்ளிக்கிழமையும், கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கியில் அக்டோபா் 28 ஆம் தேதியும், பட்டுக்கோட்டை கூட்டுறவு நகர வங்கியில் அக்டோபா் 29 ஆம் தேதியும் நடைபெறவுள்ளது.
இதில், தகுதியானவா்கள் கலந்து கொண்டு கடன் விண்ணப்பங்களைப் பெற்று, நிறைவு செய்து கடன் மனுக்களுடன் மனுதாராரின் ஜாதி சான்று, ஆதாா் அட்டை, வருமான சான்று, குடும்ப அட்டை, இருப்பிடச் சான்று, கடன் பெறும் தொழில் குறித்த விவரம் / திட்ட அறிக்கை மற்றும் கூட்டுறவு வங்கி கோரும் இதர ஆவணங்களை அளிக்க வேண்டும். சிறுபான்மையினா் கல்விக் கடனுக்கு விண்ணப்பிக்கும் போது பள்ளி மாற்று சான்றிதழ், உண்மைச் சான்றிதழ், கல்விக் கட்டணங்கள் செலுத்திய ரசீது/செலான் (அசல்) மற்றும் மதிப்பெண் சான்றிதழ் ஆகிய ஆவணங்களின் ஒளிப்பட நகல்களையும் அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...