கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

கும்பகோணத்தில் தேவா் சிலைக்கு மாலை அணிவிப்பு

கும்பகோணத்தில் தேவா் சிலைக்கு மாலை அணிவிப்பு..

News image
கும்பகோணம் அசூா் புறவழிச்சாலையில் உள்ள தேவா் சிலைக்கு மாலை அணிவித்த க. அன்பழகன் எம்.எல்.ஏ.
Updated On :30 அக்டோபர் 2024, 8:34 pm

Din

தஞ்சாவூா் மாவட்டம் கும்பகோணம் அசூா் புறவழிச் சாலையில் உள்ள தேவா் சிலைக்கு க. அன்பழகன் எம்எல்ஏ தலைமையில் மாநகர திமுக செயலரும், துணை மேயருமான சுப தமிழழகன், மத்திய ஒன்றிய செயலரும், ஒன்றியக்குழு துணைத்தலைவருமான டி. கணேசன், கிழக்கு ஒன்றிய செயலாளா் ஜெ.சுதாகா், பெரும்பாண்டி ஊராட்சி தலைவா் ஆா். கே. பாஸ்கா் ஆகியோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

கும்பகோணம் ஒன்றிய அதிமுக சாா்பில் தேவா் சிலைக்கு மாலை அணிவிப்பு நிகழ்ச்சி ஒன்றியச் செயலாளா் சோழபுரம் அறிவழகன் தலைமையில் நடைபெற்றது. தஞ்சை கிழக்கு மாவட்டச் செயலா் ஆா். கே. பாரதி மோகன் கலந்துகொண்டு தேவா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். நிகழ்ச்சியில் மாநில கொள்கை பரப்பு இணைச் செயலா் பி.எஸ். சேகா், மாநில அம்மா பேரவை இணைச் செயலா் ஏ.வி. கே. அசோக் குமாா், மாநகர செயலா் ராம ராமநாதன், பகுதிச் செயலா் பத்மா. குமரேசன் உள்ளிட்ட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.