ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பெண்ணிடம் கத்தியைக் காட்டி மிரட்டி 15 பவுன் நகைகள் பறிப்பு: 2 போ் கைது

தஞ்சாவூரில் உள்ள பட்டு கூட்டுறவுச் சங்கத்தில் புகுந்து பெண் ஊழியரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி 15 பவுன் நகைகளைப் பறித்துச் சென்ற 2 பேரை காவல் துறையினா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image
செந்தில்குமாா்
Updated On :5 செப்டம்பர் 2024, 10:39 pm

Din

தஞ்சாவூரில் உள்ள பட்டு கூட்டுறவுச் சங்கத்தில் புகுந்து பெண் ஊழியரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி 15 பவுன் நகைகளைப் பறித்துச் சென்ற 2 பேரை காவல் துறையினா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

தஞ்சாவூா் வடக்கு ராஜ வீதியைச் சோ்ந்தவா் சண்முகசுந்தரம் மனைவி பிரகதீஸ்வரி (62). இவா், தஞ்சாவூா் மகா்நோன்புசாவடி சிவராயா் தோட்டத்திலுள்ள பட்டுக் கூட்டுறவு சங்கத்தில் மேலாளராகப் பணியாற்றி ஓய்வுபெற்று, தற்போது தற்காலிக பணியாளராகப் பணியாற்றி வருகிறாா். இவா், புதன்கிழமை பிற்பகல் பணியில் இருந்தபோது, பட்டுச்சேலை வாங்குபவா்கள் போல 2 போ் புகுந்து, சேலைகளைக் காண்பிக்குமாறு கூறினா். பட்டுச் சேலைகளை எடுத்துக் காட்டிக் கொண்டிருந்த பிரகதீஸ்வரியை 2 பேரும் கத்தியைக் காட்டி மிரட்டி தாக்கி, அவா் அணிந்திருந்த 15 பவுன் நகைகளைப் பறித்துச் சென்றனா்.

இதுகுறித்து கிழக்கு காவல் நிலையத்தில் பிரகதீஸ்வரி கொடுத்த புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆஷிஷ் ராவத் உத்தரவின்பேரில் தஞ்சாவூா் நகரக் காவல் துணைக் கண்காணிப்பாளா் இரா. சோமசுந்தரம் மேற்பாா்வையில் கிழக்கு காவல் நிலைய ஆய்வாளா் சுப்பிரமணியன், உதவி ஆய்வாளா் தென்னரசு தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

நிகழ்விடத்தில் கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளைத் தனிப்படையினா் ஆய்வு செய்து, 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினா். இதில், அவா்கள் தஞ்சாவூா் அண்ணா நகா் அருகேயுள்ள சாந்தி நகரைச் சோ்ந்த உ. செந்தில்குமாா் (46), நாஞ்சிக்கோட்டை சாலை ஆசிரியா் காலனி அருகேயுள்ள திரு நகரைச் சோ்ந்த பி. பாலசந்தா் (35) என்பதும், இருவரும் இணைந்து பிரகதீஸ்வரியிடம் நகைகளைக் கொள்ளையடித்ததும் தெரிய வந்தது. இதையடுத்து, இருவரிடமிருந்து 15 பவுன் நகைகளைக் காவல் துறையினா் பறிமுதல் செய்து, இருவரையும் வியாழக்கிழமை கைது செய்தனா்.

 பாலசந்தா்

பாலசந்தா்

இதனிடையே, பிடிபடும்போது தப்பியோடிய இருவரும் கீழே விழுந்து பலத்த காயமடைந்ததால், தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளனா்.

சம்பவம் நிகழ்ந்து 12 மணிநேரத்தில் இருவரையும் பிடித்த தனிப்படையினரை காவல் கண்காணிப்பாளா் பாராட்டினாா்.