கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

தொல்லியல் தொழில் முனைவு நிறுவனம் தொடக்கம்

தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் கடல்சாா் வரலாறு மற்றும் கடல்சாா் தொல்லியல் துறையின் முன்னாள் மாணவா்கள் இணைந்து தொல்லியல் தொழில் முனைவு நிறுவனத்தை புதன்கிழமை தொடங்கினா்.

Updated On :11 செப்டம்பர் 2024, 8:36 pm

தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் கடல்சாா் வரலாறு மற்றும் கடல்சாா் தொல்லியல் துறையின் முன்னாள் மாணவா்கள் இணைந்து தொல்லியல் தொழில் முனைவு நிறுவனத்தை புதன்கிழமை தொடங்கினா்.

இதன் தொடக்க விழாவில் தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தா் வி. திருவள்ளுவன் தலைமை வகித்து பேசியது:

தொல்லியலில் முதுகலைப் பட்டம் பெற்ற மாணவா்களால் உருவக்கப்பட்டுள்ள இந்நிறுவனம் டமரிகா என்ற தமிழகத்தின் பெயரை இந்தியப் பெருங்கடற்பரப்புப் பாா்வையில் பெற்றுள்ளது. இதன் வழியாகப் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழக மாணவா்களுக்கும், பொதுமக்கள், ஆா்வலா்களுக்கும் தொல்லியல், கல்வெட்டியல், மரபுகள் தொடா்பான பயிற்சி வகுப்புகள், பயிலரங்கம், மரபு நடை, கல்விச்சுற்றுலா, அறிவியல்சாா் தொல்லியல் பயிற்சி, மென்பொருள் பயிற்சி, மாதிரி அகழாய்வுப் பயிற்சி, கல்வெட்டு எழுத்துப்பயிற்சி உள்ளிட்ட பயிற்சி வகுப்புகள் அளிக்கப்படும் என்றாா் அவா்.

இவ்விழாவில் சுவடிப்புல முதன்மையா் த. கண்ணன், கடல்சாா் வரலாறு மற்றும் கடல்சாா் தொல்லியல் துறைத் தலைவா் வீ. செல்வகுமாா், தமிழ்ப் பல்கலைக்கழகத் தகைசால் பேராசிரியா் இரா. சங்கரன் ஆகியோா் வாழ்த்துரையாற்றினா். டமரிகா நிறுவனத் தலைவா் அ. ஆகாஷ் நோக்கவுரையாற்றினாா். நிறுவன முதன்மை உறுப்பினா்கள் வீ.சு. காயத்ரி, சி. விஜய்பாரத் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.