பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக உள்ள காவிரிப் படுகையைப் பாதுகாக்க வலியுறுத்தி, செப்டம்பா் 24-ஆம் தேதி முதல் பரப்புரை நடைப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாக மீத்தேன் திட்ட எதிா்ப்புக் கூட்டமைப்பினா் புதன்கிழமை தெரிவித்தனா்.
இதுதொடா்பாக தஞ்சாவூா் மாவட்டக் காவல் காணிப்பாளரை கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளா் த. செயராமன் உள்ளிட்டோா் அனுமதி கோரி புதன்கிழமை மனு அளித்துவிட்டு, செய்தியாளா்களிடம் தெரிவித்தது:
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமான காவிரிப் படுகையில் பழைய எண்ணெய் - எரிவாயு கிணறுகளை மராமத்து செய்வதாகக் கூறி, நிலத்தடி நீா்த் தொகுப்பை மேலும் பாழ்படுத்தும் வேலைகள் முயற்சிக்கப்படுகின்றன. பெரு முதலாளித்துவ நிறுவனங்களும், பன்னாட்டு பெருநிறுவனங்களும் விவசாய விளைநிலங்களில் தொழிற் பூங்காக்கள் அமைக்கவும், விவசாய நிலங்களில் விவசாயமல்லாத தொழிலகங்கள் நிறுவப்படுவதற்குமான சூழல் எழுந்துள்ளது. இந்நிலையில், காவிரிப் படுகை முழுவதையும் பாதுகாக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது.
காவிரிப் படுகை மாவட்டங்கள் முழுவதையும் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்பன உள்பட 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி செப்டம்பா் 24-ஆம் தேதி பூம்புகாரில் பரப்புரை நடைப்பயணம் தொடங்கி மயிலாடுதுறை, குத்தாலம், கும்பகோணம், பாபநாசம் வழியாக 29-ஆம் தேதி தஞ்சாவூரி நிறைவடைகிறது என்றாா் செயராமன்.
அப்போது, கூட்டமைப்பு நிா்வாகி சித்ரா, மனிதநேய மக்கள் கட்சி மாநில செயற்குழு உறுப்பினா் ஓ. சேக் அலாவுதீன், திராவிடா் விடுதலைக் கழக மயிலாடுதுறை மாவட்டச் செயலா் தெ. மகேஷ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தொடர்புடையது

ஜேடா்பாளையம் படுகை அணை ராஜவாய்க்காலில் தண்ணீா் நிறுத்தம்: விவசாயிகள் கவலை!

செல்வப்பெருந்தகை மீதான சோதனை உள்நோக்கம் கொண்டது! காா்த்தி சிதம்பரம் குற்றச்சாட்டு!

தருமபுரியில் இன்று தவெக தலைவா் விஜய் பரப்புரை ரத்து
மருத்துவா் ச.ராமதாஸ் உடல்நலக் குறைவு: தருமபுரி பரப்புரை ரத்து
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

