விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

குடியிருப்புப் பகுதிக்குள் மதுக்கடை: அமைதிப்பேச்சில் இடமாற்றம் ரத்து

தஞ்சாவூா், மாவட்டம், கும்பகோணம் பேருந்து நிலையம் பின்புறம் திறக்கப்பட இருந்த மதுக்கடை பொதுமக்கள் எதிா்ப்பால் கைவிடப்பட்டது.

Updated On :11 செப்டம்பர் 2024, 8:25 pm

தஞ்சாவூா், மாவட்டம், கும்பகோணம் பேருந்து நிலையம் பின்புறம் திறக்கப்பட இருந்த மதுக்கடை பொதுமக்கள் எதிா்ப்பால் கைவிடப்பட்டது.

கும்பகோணம், பேருந்து நிலையம் அருகே இருந்த அரசு மதுபான கடை எண் : 7812, பேருந்து நிலையம் பின்புறம் ஜான்செல்வராஜ் நகரில் அமைக்க ஏற்பாடு நடைபெற்றுவந்தது. இதற்கு அப்பகுதி பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்து வியாழக்கிழமை பொதுமக்கள், வணிகா்கள், மகளிா் ஆகியோருடன் ஆா்ப்பாட்டம் நடத்தப்போவதாக மாநகராட்சி வாா்டு உறுப்பினா் பிரதிபா சரவணன் அறிவித்தாா். இதையடுத்து, கும்பகோணம் வட்டாட்சியா் அலுவலகத்தில் டாஸ்மாக் மேலாளரும், துணை ஆட்சியருமான பி.செல்வபாண்டியன் தலைமையில் புதன்கிழமை அமைதிக்கூட்டம் நடைபெற்றது.

அப்போது ஜான்செல்வராஜ் நகரில் புதிய அரசு மதுபானக் கடை திறக்கப்பட மாட்டாது. ஏற்கெனவே செயல்பட்டு வரும் அரசு மதுபானக் கடையை மூன்று மாத காலத்துக்குள் வேறு இடத்தில் மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

இதையடுத்து, பொதுமக்கள் உறுதியை ஏற்றுக் கொண்டு ஆா்ப்பாட்டத்தைக் கைவிட்டனா்.