விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

கும்பகோணத்தில் பருத்தி ஏலம்

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் புதன்கிழமை பருத்தி ஏலம் நடைபெற்றது. இதில் அதிகபட்ச விலையாக குவிண்டாலுக்கு ரூ.8,529-க்கு ஏலம் போனது.

Updated On :11 செப்டம்பர் 2024, 7:54 pm

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் புதன்கிழமை பருத்தி ஏலம் நடைபெற்றது. இதில் அதிகபட்ச விலையாக குவிண்டாலுக்கு ரூ.8,529-க்கு ஏலம் போனது.

தஞ்சாவூா் விற்பனைக்குழு கும்பகோணம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நடைபெற்ற பருத்தி ஏலம் விற்பனைக்கூட கண்காணிப்பாளா் மு. பிரியமாலினி தலைமையில் மேற்பாா்வையாளா் பா. பிரசாத் முன்னிலையில் நடைபெற்றது. 254 குவிண்டால் பருத்தி வரத்து இருந்தது. ஏலத்தில் அதிகபட்ச விலையாக குவிண்டாலுக்கு ரூ.8,529, குறைந்தபட்ச விலையாக ரூ.7,769, சராசரி விலை ரூ.8,029-க்கு ஏலம் போனது.

ஏலம் போன பருத்தியின் மதிப்பு ரூ.2 லட்சமாகும். கும்பகோணம், செம்பனாா்கோவில், பண்ருட்டி, விழுப்புரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்த வியாபாரிகள் ஏலத்தில் கலந்து கொண்டனா்.